பக்கம் எண் :

பொருளதிகாரம்121

படைப் பகுதி எண்ணிறந்தனவாகலின், அப்பகுதியெல்லாங் கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறி யொழிந்தானென்பது. ‘வாயென்ற பவளம்’ எனவும், ‘வாய் பவளமாக’ எனவும், ‘வாய் பவளம்’ எனவும் வந்த 1பவளக்குறிப்புவமைகளை இக்காலத்தார் உருவகமென்றே வழங்குப. இனி,

“வாய் பவளம்”

எனவும்,

“கண்ண் கருவிளை”

எனவும் பெயர்ப் பயனிலை வரின் அவற்றை ஒற்றுமை காட்டி உருவகம் என்றா 2ராகலின் அதுவும் உவமையெனவே படுமென்பது.

(3)

[உவமை பிறக்குமிடம் இவை எனல்]

279.சிறப்பே நலனே காதல் வலியோ
டந்நாற் பண்பு நிலைக்கள மென்ப

இதுவும், எய்தாதது எய்துவித்தது.

இ--ள் : வினை பயன் மெய் உரு என்பனபற்றி உவமை கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமை என்றவாறு.

‘நிலைக்களம்’ என்பது, அவை அவ்வாறு உவமை செய்தற்கு முதலாகிய நிலைக்களமென்றவாறு.

“முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
 3யரசவை யிருந்த தோற்றம் போலப்
 பாடல் பற்றிய பயனுடை யெழாஅற்
 கோடியர் தலைவ கொண்ட தறிஞ.”

(பொருந. 54)

என்பது, சிறப்பினாற் பெற்ற உவமமாகலிற் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்தது.


1. பவளம் என்ற சொல் ஈண்டு வேண்டியதில்லை.

2. ஆகலின் என்பது ஆயினும் என்றிருப்பது நலம்.

3. இப்பாட்டிற் போல என்பதைப் பாடல்பற்றிய என்பதனோடு முடிக்க. தோற்றம் அவைக்குச் சிறப்பளித்ததுபோலப் பாடலும் நிருத்தகீத வாச்சியத்தோடு கூடித் தோற்றம்பெற்றுப் பாட்டிற்குச் சிறப்பளித்தமையின், தோற்றம்போல என்பதைச் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்த வுவமை என்றார் என்க. சிறப்