பக்கம் எண் :

122உவமவியல்

1 “ஓவத் தன்ன விடனுடை வரைப்பின்.”

(புறம். 251)

என்புழி, அந்நகரினது செயற்கை நலந் தோன்றக் கூறினமையின் அதற்கு நிலைக்களன் நலனாயிற்று.

2 “பாவை யன்ன பலராய் மாண்கவின்”

(அகம். 98)

என்புழி மகள்கட் காதல் காரணமாக உவமை பிறந்தது; ‘என் யானை’ என்பதும் அது.

“அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்”

(பாட்டின. 298)

என, ஒருவன் வலி காரணமாக உவமம் பிறந்தமையின் அதற்கு நிலைக்களம் அவன் வலியாயிற்று.

இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப்பட்ட பொருள் யாதானும் இயைபில்லதொன்று கூறலாகாதெனவும், உவமையொடு முழுதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோ 3டொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டுமெனவுங் கூறி, அவைதாமும் 4பிறர் கொடுப்பப் பெறுவனவும், ஒரு பொருட்கண் தோன்றிய 5நன்மை பற்றியவும், காதன் மிகுதியால் உளவாகக்கொண்டு உரைப்பனவும், தன்றன்மையால் 6உளவாயின வலிபற்றினவுமென நான்கா

பாவது பிறர் கொடுக்கப் பெறுவது என்றும், இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுவது என்றும் பேராசிரியர் கூறுவர்.

இனி, போல என்பதை இப்பாட்டின் இறுதியில் வரும் இன்மைதீர வந்தனன் என்பதனோடு முடித்துப் பயனுவமையாக நச்சினார்க்கினியர் கொள்வர். அம்முடிபின்படி, சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பயனுவமையாகக் கொள்ளுங்கால், தோற்றம் பெற்று அவை சிறப்புற்றதுபோல யானும் நின்பொருள் பெற்றுச் சிறப்படைய வந்ே்தன் என்பது கருத்தாகக் கொள்க. முந்திய முடிபே பேராசிரியர்க்குக் கருத்தென்பது, உதாரணங்காட்டுமிடத்து நான்கடியையுமே காட்டியதாலறியப்படுகின்றது.

1. ஓவம்--ஓவியம். வரைப்பு--நகர்.

2. பாவை--வடிவுவமை. மகளிற்கொண்ட காதல்பற்றிப் பாவை என்றலின் காதல்பற்றி என்றார். யானை என்பதும் காதல் நிலைக்களனாகப் பிறந்த வினையுவமை.

3. ஒக்கும் பொருள்--பொதுத்தன்மை.

4. பிறர் கொடுக்கப் பெறுவன--சிறப்பு.

5. நன்மைபற்றிய--நலம்பற்றி வருவன.

6. உளவாயினவாகிய வலி பற்றிய என்க.