இடந்தலைப்பாடு நிகழாதெனவும், அவ்விடந்தலைப்பாடு 1பிற் பயத்தலரிதென்பது அவள் ஆயத்தொடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலும், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன்பின்னர்த் தோழியாற் குறைமுடித்துக் கோடலுமென இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கமென்றவாறு. “வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னாணுவரை யிறத்த னோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை.” என்பனவுங் கைகோளாகாவோவெனின்,--ஆகா; கைகோளென்பது ஒழுகலாறாகலான். அவை அவற்றுட் பிறந்த உள்ள நிகழ்ச்சி ஒன்றொன்றனிற் சிறந்து பெருகியக்கால் அவ்வப் பகுதியாமெனக் கொள்க. மற்றுக் களவியலுள், “ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் குறிதலைப் பெயலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலும்.” (இறையனார் --3) எனப் பாங்கற்கூட்டம் முற்கூறியதாலெனின்,--இது கைகோள் கூறிய இடமன்மையின் முற்கூறினும் அமையுமென்பது. மற்று; இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகனைப் பாங்கன்கண்டு இவ்வேறுபாடு எற்றினானாயிற்றென்று வினவுமன்றே? அதனாற் பாங்கற்கூட்டம் நிகழ்ந்தபின்னரன்றி இடந்தலைப்பாடு நிகழாதாம் பிறவெனின்,--அற்றன்று; யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்லதன்றாமாகவே உலகத்தார் நிறையுடையாராகி மறைவெளிப்படாமல் ஒழுகுவாரும் மறைவெளிப்படுத்து விளம்பும் பாங்கனையுடையாரும், இல்லாதாருமெனப் பலவகையராதலின் வினாதல் ஒருதலையன்றென்பது; அல்லதூஉம், தன்
1. பிறர் பயத்தல் என்பது முற்பாடம். அது பிற்பயத்தல் என்று காணப்படுகின்றது. அதுவே பொருத்தம். ஏனெனின்? ஆயத்தோடு கூடி நிற்றலின், அவளை இடந்தலைப்பட்டுக் கூடல் பின் அரி தென்றுணர்ந்தா னாதலின். S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலும் அவ்வாறு உள்ளது. |