அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்ததுபோலும். ‘யாத்த’ என்றதனால், 1கடாயென்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க; அது, “நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கடாஅய்.” (அகம். 156) என வரும். இனிக் குரங்கினை அப்பரென்றலுங் கொள்க. (47) [சேவல் என்னும் பெயர்க்குரியன இவை எனல்] | 603. | சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு மாயிருந் தூவி மயிலலங் கடையே. |
இ--ள் : பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாஞ் சேவற் பெயர் உரித்து; அவற்றுண் மயிற்காயின் அஃதாகாது என்றவாறு. “காமர் சேவ லேமஞ் செப்ப.” (அகம். 103) எனவும், “வளைக்கட் சேவல் வாளாது மடியின்.” (அகம். 122) எனவும், “தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்.” (குறுங் 107) எனவும், “கானங் கோழிக் கவர்குரற் சேவல்.” (குறுந். 242; புறம். 395; மலைபடு. 510) எனவும், “உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்.” (குறுந். 85) எனவும் வரும். பிறவும் அன்ன. ‘மாயிருந் தூவி மயில்’ என்றதனான் அவை தோகையுடையவாகிப் பெண்பால்போலுஞ் சாயலவாகலான் ஆண்பாற்
1. கடா என்பது, பவானந்தம்பிள்ளை பதிப்புக்களிற் காணப்பட்ட பாடம். வழக்கிற்கிடாஅய் என வழங்குகின்றது. ஆயின் இது கடா எனவும் வழங்குகின்றது. |