பக்கம் எண் :

பொருளதிகாரம்709

[முதனூற்கண் குற்றம் இல எனல்]

661. சிதைவில வென்ப முதல்வன் கண்ணே.

இது, மேற்கூறிய வழிநூற்குப்போல முதனூற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : மேற் பொதுவகையாற் கூறப்பட்ட நூலிலக்கணம் ஐந்தனுள் ஈரைங்குற்றமுமின்றியென முன்னே ஓதிய இலக்கணம் ஒன்று; முதனூற்காயின் அம்மரபின இலக்கணம் வேண்டுவதன்று என்றவாறு.

சிதைவிலக்கணத்தைச் சிதைவென்று ஓதினான் ஆகுபெயரானென உணர்க. மற்று,

“வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவற்கு”

(649)

சிதைவிலவென்பது அறிவானே உணர்வலெனின்,--எடுத்தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லதூஉம், முதனூற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப் பெறினன்றே முதல்வன்றான் நூலிலக்கணஞ் செய்வது; மற்று 1அன்னதோர் நூலின் அவன் செய்யாத2நூலிலக்கணம் யான் செய்தேனெனவும். 3அவற்றுச் சிதைவினையே முதனூற்கண் இல்லை 4யென்றதூஉம், 5ஒழிந்தநான்கும் முதல்வனூற்கண்ணே உளவாகலின் அவற்றை இலக்கணங் 6கூறினான் எனவும் இனிக்குற்றங்களும் பிற்றோன்றுங்கொலென்று அஞ்சி இங்ஙனம் அவற்றை வரையறுத்து யான் பாதுகாக்கின்றேனெனவும், அங்ஙனம் பாதுகாத்து இவ்விலக்கணங்கள் ஓதிற்றும் அவன் முத


1. அன்னதோர் நூலின் என்பது அன்னதோர் நூலின்மையின் என்றிருத்தல்வேண்டும். இதன் முதற் சூத்திர உரையுள் ‘முன்னையதோர் நூலின்மையின்’ 660 என வருதல் நோக்குக.

2. நூலிலக்கணம் என்றது நூல் செய்யு முறையை. இது பாயிரத்துக்குரியது.

3. அவற்றுள்--அந்நூலிலக்கணங்களுள். அவற்று--அவற்றுள் என்றிருத்தல்வேண்டும்.

4. என்றதூஉம் என்பது என்றது எனவும் என்றிருப்பது நலம்.

5. ஒழிந்த நான்கு--சிதைவு(குற்றம்) ஒழிந்த சூத்திரம், காண்டிகை, விருத்தி, உத்தி என்பன.

6. கூறினேன் என்றிருத்தல்வேண்டும்.