பக்கம் எண் :

708மரபியல்

இது, வழிநூற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : மேற்கூறிய சூத்திரமும் காண்டிகையும் உரையுமென்னும் மூன்றற்குஞ் சொல்லப்பட்ட இலக்கணமெல்லாஞ் சிதையாது மாட்சிமைப்படினும் முதனூலோடு மாறுகொள்ளின் அவற்றான் எல்லாஞ் சிதைந்ததெனவேபடும் அந்நூல் என்றவாறு.

‘மறுதலையாயினும்’ என்ற உம்மை, எதிரது தழீஇயிற்று; மேற்கூறும் பத்துவகைக் குற்றமுமே (653) யன்றி வழிநூற்கு இதுவுங் குற்றமாமென்றமையின். ‘ஈரைங்குற்றமுமின்றி’ என்பதனை நோக்க இறந்தது தழீஇயிற்றுமாம். இதனானே பிற்காலத்து நூல்செய்வார் நூலிலக்கணம் பிறழாமற் செய்யினும் முற்காலத்து நூலொடு பொருண் மாறுபடச் செய்யின் அது மரபன்று வழிநூற்கென விலக்கியவாறாயிற்று. எனவே, முதனூற்காயின் இவ்வாராய்ச்சியின்றென்பது கருத்து; என்னை? முதல்வனூன் மாறுபடுதற்கு அதன் முன்னையதோர் நூல் இன்மையினென்பது. அல்லதூஉம், ‘மற்றது’ என்று ஒருமை கூறினமையானும் இது வழிநூற்கே விலக்கிற்றென்பது கொள்க. மற்று மேல்,

“முதலும் வழியுமென நுதலிய நெறியின.”

(648)

எனவே, முதனூலின் வழித்து வழிநூலென்பதூஉம் மறுதலையாயிற் சிதைவென்பதூஉம் பெறுதுமாகலின் இச்சூத்திரம் மிகையாம் பிறவெனின்,--அற்றன்று; முதல்வழியென்பன முன்னும் பின்னுங் காட்டினன்றி மாறுபடாமைக் கூறல்வேண்டுமென்பதூஉம் 1பெறுதுமாகலின் 2அது கூறல்வேண்டுமென்பது. பெறாமாகலின் 3இது கூறல்வேண்டுமென்பது. அல்லாக்கால்,

4“முன்னோர் நூலின் முடிபொருங் கொவ்வாமைப்
  பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுவான்.”

செல்லுமென்பது.

(105)


1. பெறுதுமாயின் என்றிருத்தல்வேண்டும்.

2. அது என்றது மிகையை,

3. இது--இச்சூத்திரம்.

4. முன்னோர் நூலின் முடிபொருங்கொத்துப்--பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி என்ற நன்னூற் சூத்திரத்தின் அடிகளைச் சேர்த்து எழுதப்பட்டது இவ்வாக்கியம்.