பக்கம் எண் :

பொருளதிகாரம்707

என்றவழிப், பிறிதென்று ஒருகாற் சொல்ல ஆறாமுருபெனவும், பின்னொருகாற் பிறிதென ஒழிந்த உருபெல்லாந் தழுவுமெனவுஞ் சொல்லுதல் போலியெனப்படும்; என்னை? அவ்வாறாவதனொடு ஏழாமுருபும் பிறவுருபேற்கும் வழக்குள்வழி 1ஒன்றனைக் கொண்டமையின், 2அஃது ஒருபுடையொப்புமையுடைத்தாகி அப்பொருளன்றெனவும்படாது 3மற்றொன்றனைக் கோடல் பொருளெனத் துணியவும்படாது ஐயவுணர்வு செய்தமையின் அது போலியாயிற்று.

இனிப்,

“பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும்.”

(தொ. சொ. 105)

என்னும் இரண்டும்மையும் 4பொருளிலவென்று பிறிதுபிறிதேற்றல் உருபுதொக வருவதற்கண்ணென்று பொருள் கூறுதல் போல்வன, சூத்திரத்தின் கருத்தறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கையெனப்படும். இவ்விரண்டனையும் நீக்கி உண்மை உணர்த்துதல் உரையெனப்படுவதாயிற்று. நிற்றலென்பது, நிற்க அவ்வுரையென்றவாறு. தன்நூலானும் முதனூலானும் ஐயமும் மருட்கையும் நீக்குங்கால் அவற்றுட் கிடந்த செம்பொருளானே நீக்கப்படு 5மென்பது ’இரண்டு கண்ணானுங் கூர்மையாற் பார்த்தான்’ என்பதுபோலக் கொள்க.

(104)

[வழிநூல் முதனூலோடு மாறுபடச் செய்யிற்
குற்றமாமெனல்]

660. சொல்லப் பட்டன வெல்லா மாண்பு
மறுதலை யாயினு மற்றது சிதைவே.

1. ஒன்றனைக்கொண்டு--ஆறாவதையே கொண்டமையின்.

2. அஃது ஒருபுடை ஒப்புமையுடைத்தாகி என்றது ஆறாவதனையே கொண்ட அப்பொருள் ஒருபகுதியாகிய ஆறாவதனோடு மாத்திரம் ஒப்புமையுடைத்தாய் என்றபடி.

3. மற்றொன்று--எழாவது. அது பெயராய் நின்று பிறவுருபேற்கும். ஏழாமுருபு பிறவுருபேற்றற்கு உதாரணம்: தலைக்கணின்றான் இடைக்கணின்றான் என்பன போல்வன. ஆறாவது தன்னுடைமைப் பொருளோடு பெயராய் நின்று ஏற்கின்றது; இஃதன்னதன்று. ஆதலின் இவர் கருத்துப் பொருந்தாது என்க.

4. பொருளில என்றது அசைநிலையை. இவ்வாறு பொருள் கொள்பவர் எவர் என்பது புலப்படவில்லை.

5. என்பது--என்பதை என்றிருத்தல் வேண்டும்.