பக்கம் எண் :

124நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மேலும், இவை புணர்ச்சி முதலிய ஐந்தனுள் எதனினும் அடங்காமல் உரிப்பொருளாயுமமைதலின், “நிலையலும் பாலை” “நிலையலும் பிரிவு” என்னாது, ஐந்திணைகள் போல “நிலையலும் திணையே” எனப் பொதுப்படக்கூறிய பெற்றியுமறிக.

தலைவி நிகழ்ந்தது கூறி நிலையலுக்குப் பாட்டு:

“கேட்டிசின் வாழி, தோழி! யல்கற்
 பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
 வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
 தமளி தைவந் தனனே, குவளை
 வண்டுபடு மலரிற் சாஅய்த்
 தமியேன் மன்ற வளியேன் யானே. ”

(குறு. 30)

“துறுக லயலது மாணை மாக்கொடி
 துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
 நெஞ்சுகள னாக ‘நீயலென் யா’னென . . .
 நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்
 தவாஅ வஞ்சின முரைத்தது
 நோயோ தோழி நின்வயி னானே. ”

(குறு. 36)

என்பதுமது.

“கொடியவுங் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்
 பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலன்கோதைத்
 தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளா
 யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென . . .
 நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்
 பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
 நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
 விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தனன்;
 நறாஅவிழ்ந் தன்னஎன் மெல்விரற் போதுகொண்டு
 செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
 றொய்யி லிளமுலை யினிய தைவந்து
 தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு
 மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;