| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 123 |
ஆகத் தரும்பிய முலையள், பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயு மறியா மறையமை புணர்ச்சி பூசற் றுடியிற் புணர்வுபிரிந் திசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற் கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல கடுங்கஞர் தீர முயங்கி நெருநல் ஆக மடைதந் தோளே, வென்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக் கடவு ளெழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅ யோளே. ”
எனும் அகம் (62ஆம்) செய்யுளுமதுவே. | சூத்திரம் : 43 | | | | நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. |
கருத்து : இதுவும், முற்சூத்திரத்தைப் போலவே, ஐந்திணை சூத்திரங்களி லடங்காது, அறவே அவற்றின் வேறுமாகாது, திணைக்குரிப் பொருளாய் அகத்துறையில் வந்து பயிலும் பிறிதொன்று கூறுகிறது. பொருள் : நிகழ்ந்தது கூறி = காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி; நிலையலுந்திணையே = நிலைபெறுதலும் அகத்துறை ஒழுக்கமேயாகும். குறிப்பு : பழைய உரைகாரர் இவ்விரு சூத்திரங்களையும் பாலைத்திணைக்கே உரியன போலக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று; பாலையல்லாப் பிற திணைகளிலும் நிகழ்ந்தது நினைத்தலும் நிகழ்ந்தது கூறி நிலையலும் வருதலின், அவை எல்லாத்திணைக்கும் உரியவாய் அமையுமென்க. அதுபற்றியே, பாலைத்திணை இயல்புகளோடு இவற்றைக் கூறாது, அவைமுடிந்து பொதுவியல் கூறும் இவ்விடத்து இச்சூத்திரங்கள் வைக்கப்பட்டன. |