பக்கம் எண் :

218நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சிலைத்தோள் மறவ ருடற்பொறை யடுக்கத்
தெறிபிண மிடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காட”.

என வருமடிகளும், இருநிலம் தீண்டாத் துணியுறுப் பருநிலை குறிப்பன.

சூத்திரம் : 17 
 தானை யானை குதிரை யென்ற
நோனா ருட்கு மூவகை நிலையும்,
வேன்மிகு வேந்தனை மொய்த்த வழியொருவன்
தான்மீண் டெறிந்த தார்நிலை, யன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்,
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்
கூழை தாங்கிய எருமையும், படையறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும்,
களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும், களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும், வாள்வாய்த்
திருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்,
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
யொருவன் மண்டிய நல்லிசை நிலையும்,
பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.

கருத்து : இது, தும்பைத் திணையின் துறைவகையும் இயல்பும் கூறுகிறது.

பொருள் : (13); தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் = பகைவரை அஞ்சப் பண்ணும் ஆட்படை வகுப்பு, யானை நிரை, குதிரையணி எனும் முத்திற நிலைகளும்;

“பகைபெரு மையிற் றெய்வம் செப்ப
ஆரிறை யஞ்சா, வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை