பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை217

அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங் கருத்துத் தெளியப்படும். [இங்கு, ‘அரு’ என்பதை அட்டை எனக் கொண்டு, அதன் பின்வரும் ‘இருபாற்பட்ட’ எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இருகூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவதுபோலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப்பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்பதியல்பாதலால், இருபாற்பட்ட என்பது பொருளற்ற தாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையே யாமாதலால் அது இருநிலந் தீண்டா அருநிலை எனற்குமமையாது. அதனால், இருபாற்பட்ட எனுந்தொடர் அதை யடுத்துவரும் ‘ஒரு சிறப்புக்கே’ அடையாதல் தேற்றம். ]நின்ற யாக்கை, நிலந் தீண்டா உறுப்பு அருநிலை, என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க.

வெற்றுடலும் அற்ற தலையும் நிலந் தீண்டா நிலைக்குச் செய்யுள் :

“. . . . . . . . . . . . . . . .
வருபடை தாங்கிய கிளர்தா ரகல
மருங்கட னிறுமார் வயவ ரெறிய
உடம்புந் தோன்றா ருயிர்கெட் டன்றே;
மலையுநர் மடங்கி மாறெதிர் கழிய . . . .
முலையா நிலையி னுடல்நின் றன்றே. ”

- புறநானூறு

இது, சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலத் தீண்டா அருநிலை குறிப்பது.

இனி, “கொடுமணம் பட்ட” எனும் பதிற்றுப்பத்துப் பாட்டில்,

“தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ
 டுருவில் பேய் மகள் கவலை கவற்ற”

பதிற்று. 67

என்பதும்,

சிலப்பதிகாரக் கால்கோட் காதையில்,

“தாரும் தாருந் தாமிடை மயங்கத்
 தோளும் தலையுந் துணிந்து வேறாகிய