| 216 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
திணையாகக் கொள்ளும் பின்னூற் கொள்கை மிகையாதல் வெளிப்படை. அதுபற்றியே தொல்காப்பியர் எதிரூன்றலைக் காஞ்சியெனக் கூறிற்றிலர். | சூத்திரம் : 16 | | | | கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகையோ டிருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. |
கருத்து : இது, தும்பைத் திணையின் ஒரு சிறப்புணர்த்துகிறது. பொருள் : கணையும், வேலும் துணையுற மொய்த்தலின் = அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின்; சென்ற உயிரின் நின்ற யாக்கை. (அருநிலைவகை) = பிரிந்த உயிரினின்றும் நீங்கியபின்னும் வீழாதுநின்ற உடலின் அரிய நிலைப்பரிசு; இருநிலந் தீண்டா அருநிலைவகையோடு = (அறுபட்டதலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல்முனைப்பால் துடித்தியங்கும் அரிய நிலைமை யாகிய பரிசுடன்; இருபாற் பட்ட ஒரு சிறப்பின்றே = இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினை யுடைத்தே தும்பைத்திணை. குறிப்பு : ஈற்றேகாரம் அசை. ‘இன்’ உருபிரண்டில் முன்னது ஏதுப்பொருளிலும், பின்னது நீங்கற் பொருளிலும் வந்தன. முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந்தோயாமல் துடித்தியங்கலும், ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத் திணை. இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலை துடிப்பதுடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்பிற்றாகலின் சுட்டிக் கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது. அன்றியும், ‘சென்ற உயிரினின்றயாக்கை’ எனப் பிரித்து “இருநிலந் தீண்டா அருநிலை வகையோடு, இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்று” எனக் கூட்டியதால், யாக்கையும் அதன் |