| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 215 |
| சூத்திரம் : 14 | | | | தும்பை தானே நெய்தலது புறனே. |
கருத்து : இது, தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் எனக் கூறுகிறது. பொருள் : வெளிப்படை. குறிப்பு : ஏகாரம், முன்னது பிரிநிலை; பின்னது அசை. நெய்தல் போலவே தும்பையும் ஆர்ப்பு, அலைப்பு, இரங்கல் இவற்றிற்கு இடனாதலானும், நெய்தலில் புலம்புறு தலைவியர் இரங்கல் ஓயத் தலைவர் கார்காலத்தே மீளுதல் போலத் தும்பையில் அமரோய்வு கார் காலத்தாதலானும், நெய்தற்குரிய பரந்த மென்னில வரைப்பு போர்க்குச் சிறந்துரியதாதலானும் நெய்தலுக்குத் தும்பை புறனாயிற்று. | சூத்திரம் : 15 | | | | மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப. |
கருத்து : இது, ‘தும்பைத் திணை இயல்பை விளக்குகிறது. பொருள் : மைந்து பொருளாக வந்த வேந்தனை = தன்வலியை மதித்து இகலி வந்த வேந்தனை; சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப = எதிர்த்துப் போய்ப் பொருதடர்க்கும் சீருடைத்து தும்பைத்திணை என்பர் புறநூற் புலவர். குறிப்பு : தும்பைத்திணை என்னும் எழுவாய். பொருட் டொடர்பால் முன் சூத்திரத்தினின்றும் பெறப்பட்டது. “தும்பை” இருபடையும் ஒருங்கு மலையும் போர் குறிப்பதால், வந்த வேந்தனை இருந்த மன்னவன் எதிரூன்றிப் பொருதலும், அவ்வாறு தடுத்தெதிர்த்தவனை வந்தோன் அடுத்தமர் தொடுத்தலும், ஆகிய இருதிறமும் அடங்கச் சூத்திரம் அமைந்த செவ்வி கருதற்குரியது. எதிர்த் திருவர் மலைவதே போராதலின், போர் குறிக்கும் தும்பையின் வேறாக எதிரூன்றலைக் காஞ்சி என வேறு |