| 214 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
துளங்குகுடி திருத்திய விளங்குபெரு வென்றிக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்’ - பதிற்றுப்பத்து, 4ஆம் பதிகம் | 3. | “பொற்புடை விரியுளைப் பொலிந்து பரியுடை நன்மான் வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியிற் கொடிதே, மறப்பன் மாதோ நின்விறற் றகைமையே. ” | | | - நற்றிணை - 270 |
இங்குப் பின்னிரு பாட்டுக்களில் நன்னனை அவன் தானை யொடழித்து, அழிந்தோர் மனைவியர் கூந்தலை அரிந்து, வென்ற வேந்தன் தன்தானைப் போர்யானைக் கயிறாகத்திரித்துக் கொண்ட கொடுமறமும், அப்போரில் தோற்றோர் தொகுதியின் தொலைவும் சுட்டப்படுதலின், இவை ‘தொகை நிலை’த் துறையாதல் காண்க. மக்கள் தொக்கதொகுதியாய்த் தொலைவதையே தொல்காப்பியர் காலப் புலவர் ‘தொகைநிலை’ என வழங்கினர் என்பது, தும்பைத்திணைத் துறைவகையில் தொல்காப்பியர் சுட்டும் தொகைநிலைக் குறிப்பாலினிது விளங்கும். ‘ஒருவருமொழியாத் தொகைநிலை’ என்பது ஆங்கவர் தரும் ‘தொகைநிலை’க் குறிப்பாகும். உழிஞையிலும் தோற்றோரின் தொகையழிவே வென்றோர் விழவொடு ஒன்றுவதாகும். [இனி, இதில் தொகைநிலைக்கு நச்சினார்க்கினியர் வேறு பொருள் கூறுவர். ‘போர் முடிவில் வென்றோர் வீழாது நின்றோரைத் திரட்டி, புண்புறம் பொதிந்தும், தண்மொழி பகர்ந்தும், அவர் திறம்வியந்தும், தளர்வோரை ஊக்கியும் பாராட்டுவது ‘தொகைநிலை’ என்பதவர் கருத்து. தொகை கூட்டம் குறிக்குமாதலின், அவ்வாறு கொண்டார்போலும். ] வகை நான் மூன்றே துறை என மொழிப = பன்னிரு வகைப்படும் உழிஞைத் துறை என்பர் புறநூற் புலவர். குறிப்பு : இதல், ‘மற்று’ எல்லாம் அசை. ‘உழிஞைத் துறை’ என்பது கொண்ட பொருட்டொடர்பால் பெறப்பட்டது. புறநூற் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. புதுமையானும் என்பதில் ஆன் அசை. |