| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 213 |
[இங்கு வாளை வெற்றிதரும் படைக்கலங்களுக்குப் பொதுக் குறியீடாகக் கொள்ளுதல் சால்புடைத்தாகும். வாளைப் போலவே வேலும் பண்டை மறவர் கொண்ட போர்ப் படையாதலின், வென்றபின் வேல்கழுவி விழவெடுத்தலும் இத்துறையேயாகும். ] “பிறர்வேல் போலா தாகி இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே. இரும்புற நீறும் ஆடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங் கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவா னாதே. ” - புறம். 332. 12. ஒன்ற, தொகைநிலை யென்னும் துறையொடு தொகைஇ = (வென்ற வாளை நீராட்டும் விழவொடு) பொருந்த, தோற்றோர் தொகுதித் தொலைவாம் ‘தொகை நிலை’ என்னும் துறையொடுகூட்டி; தொகைநிலைத் துறைக்குச் செய்யுள் : | 1. | “அடுந்தேர்த் தானை ஆரிய வரசர் கடும்படை மாக்களைக் கொன்று களங்குவித்து நெடுந்தேர்க் கொடிஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட, எருமைக் கடும்பரி யூர்வோ னுயிர்த்தொகை ஒருபக லெல்லையி னுண்ணு மென்ப தாரிய வரச ரமர்க்களத் தழிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன். ” | | | - சிலப்பதி 26. கால்கோள் - வரி 211 - 218. |
| 2. | “. . . . . . . . . . . . . . . . . உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை நிலைச்செ ருவினால் தலைய றுத்தவன் குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டுத் |
|