| 220 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கயந்தலை மடப்பிடி புலம்ப விலங்கு மருப்பியானை யெறிந்த வெற்கே. ” - புறம். 303. “மாவா ராதே, மாவா ராதே, எல்லார் மாவும் வந்தன, எம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே, இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல வுலந்தின்று கொல்லவன் மலைந்த மாவே. ” - புறம். 273. இவை குதிரைமறந் துலக்கும் பாட்டுக்கள். 4. வேன் மிகு வேந்தனை மொய்த்த வழி, ஒருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை, அன்றியும் = வேன்மறத்தால் வீறு பெற்ற வேந்தனைப் (பகைமறவர்) சூழ்ந்து நெருக்கிய விடத்து, அவன் தானைத்தலைவன் தான் ஒருவனாய்ப் பகைவர் முன்னணியை மறித்து முறித்த தும்பைத் தார்நிலையும், அல்லாமலும்: “இவர்க்கீத் துண்மதி கள்ளே; சினப்போ ரினக்களிற் றியானை யியறேர்க் குரிசில்! நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன் அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே; மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. ” - புறம். 290 இது தார்நிலை. “வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச் செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. ” - புறத்திரட்டு 1362. இதுவும் தார்நிலை. |