பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை25

உண்மையானும், ஈண்டு வைகுறு, விடியல், எற்பாடு என்பன மூன்றும் முறையே கங்குலிறுதிப்பொழுதான வைகறையும், வெயிலொடு விரிகதிர் விடியலான பகல் முதற் சிறுபொழுதாகிய காலையும் மருதத்துக்கும், பகலிறுதியில் சுடர்படும் பொழுதான எற்பாடு நெய்தலுக்கும் சிறப்புறவருமெனும் உரையே உண்மையுரையாமெனத் தெளிதலெளிதாம். அதனால் நச்சினார்க்கினியரொடு இளம்பூரண அடிகளும் இதுவே இச்சூத்திரப் பொருளாகக் கூறுதல் அமைவுடைத்தாகும்.

1. விடியல் அல்லது காலை மருதப் பெழுதாதற்குச் செய்யுள்:

“காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
 வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
 மல்ல லூரன் எல்லினன் பெரிதென
 தெறுவ தம்ம இத்திணைப் பிறத்தல்லே”

(குறுந். 45)

“நிரைதார் மார்பன் நெருந லொருத்தியொடு
 வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
 இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
 . . . . . . . . . . . . . . . .

 பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
 தாங்குமதி வலவ என்றிழிந்தனன். . . . .
 . . . . . . . . . . . . . . . .

 மகனொடு தானேபுகு தந்தோனே யானது
 தடுத்தன னாகுதல் நாணி இடித்திவற்
 கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென்
 றலைக்குங் கோலொடு குறுக, தலைக்கொண்டு
 . . . . . . . . . . . . . . . . . .
 அழுங்கின னல்லனோ அயர்ந்ததன் மணனே”

(அகம். 66)

இதில், கூடாமலே தலைவி காலையில் ஊடியதிறம் கூறியதறிக.

“சேற்றுநிலை முனைஇய”

எனும் அகப்பாட்டும்(16);