| 26 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“உணர்குவ னல்லேன் உரையல்நின் மாயம்” எனும் (226ஆம்) அகப்பாட்டுமதுவேயாம். 2. வைகறை மருதப் பொழுதாதல், “பொதுக்கொண்ட கௌவையிற் பூவணை பொலிந்தநின் வதுவையுங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை” (கலி. 66) எனவரும் கலிப்பாட்டடியிற் காண்க. 3. இனி எற்பாடு நெய்தற்கு வருதல், “நெடுவெண் மார்பி லாரம் போல்” எனவரும் (120) அகப்பாட்டாலறிக. | சூத்திரம் : 9 | | | | நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. |
கருத்து : இது பாலைக்குப் பருவமும் பொழுதும் கூறுகிறது. பொருள் : நடுவுநிலைத்திணையே = அன்பினைந் திணையுள் நடுநின்ற பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் = நடுப்பகல் முதிர்வேனிலொடுகூடப் பொருந்துமிடத்து; முன்னிய நெறித்து = அதுபிரிவுக்குச் சிறந்ததாகக் கருதும் முறைமையுடைத்தாகும். குறிப்பு : ஏகாரம், முன்னது இசை நிறை, பின்னது அசை. நண்பகலாகிய சிறுபொழுதும் முதிர்வேனிலாகிய பெரும் பொழுதும் பாலைத் திணையாகிய பிரிவிற்குத் தனித்தனியுரிமை கொள்ளுதலேயுமன்றி, இவை தம்முட் கூடிய நிலையில் முதிர்வேனிலின் நண்பகல் பிரிவுக்கு மிகவும் சிறப்புரிமையுங்கொள்ளுமென்பது இச்சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. முதிர்வேனிற்காலம் ஆனியும் ஆடியுமாகிய திங்களிரண்டுமாம். இதில், வேனிலென்பது முதிர்வேனிற் பருவத்தையே குறிக்கும்; அதுவே பிரிவுக் குரித்தாகலின், முதிர்வேனிலிற் பிரிந்தார் |