பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை27

கார்காலத்தில் கூடுவர். இளவேனில் கூடுதலுக்கே உரிய பருவமாகும். பின்பனிக்காலத்தில் பிரிந்தார் இளவேனிலிற் கூடுவர். முதிர்வேனில் பிரிவுக்குரித்தாதற்குச் செய்யுள் :

“உறைதுறந் திருந்த புறவிற் றனாது
 செங்கதிர்ச் செல்வன் தெறுதலில், மண்பக,
 உலகு மிகவருந்தி அயாவுறு காலைச்
 சென்றன ராயினும் நன்றுசெய் தனரெனச்
 சொல்லித் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்
 செங்கோல் வாளிக் கொடுவி லாடவர்
 வம்ப மாக்க ளுயிர்த்திறம் பெயர்த்தென
 வெங்கடற் றடைமுதற் படுமுறை தழீஇ
 உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
 மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
 ஊறில ராகுத லுள்ளா மாறே”

(நற். 164)

சூத்திரம் : 10 
 பின்பனி தானு முரித்தென மொழிப.

கருத்து : இது, பிரிவுக்குப் பின்பனியும் உரித்தாதல் கூறுகிறது.

பொருள் : (முதிர்வேனிலேயுமன்றி) பின்பனிக்காலமும் பிரிவுசுட்டும் பாலைத்திணைக் குரித்தாகுமென்று கூறுவர் (புலவர்).

குறிப்பு : பின்பனிப்பருவம் மாசியும் பங்குனியுமாகிய திங்களிரண்டும் கொண்டதாகும். பின்பனி பிரிவுப்பருவமாதல், பின்வரும் ஆலத்தூர்கிழாரின் குறும்பாட்டிற் காண்க.

“அம்ம, வாழி, தோழி! முன்னின்று
 ‘பனிக்கடுங் குரையம், செல்லாதீ’மெனச்
 சொல்லின மாயிற் செல்லார் கொல்லோ?
 ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
 நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
 ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்