| 28 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மலையுடைக் கானம் நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே” (குறுந். 350) பின்பனிப் பிரிந்தோர் இளவேனிற் கூடுவதற்குச் செய்யுள்: “கோங்கங் குவிமுகை யவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கு முற்றா வேனின் முன்னிவந் தோரே” (நற். 86) “. . . . . புணர்மினோ என இணர்மிசைச் செங்க ணிருங்குயி லெதிர்குரல் பயிற்று மின்ப வேனிலும் வந்தன்று” (நற். 224) என்னும் பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாட்டடிகளும், பிரிந்த காதலர் திரும்பக்கூடும் “காமர் வேனின்மன்இது” என்னுமகப்பாட்டடியும், “ஊடினீ ரெல்லா முருவிலான் றன்னாணை கூடுமி னென்று குயில்சாற்ற- நீடிய வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்கலந்தாய் காண்”, எனவரும் சிலப்பதிகார வெண்பாவும், பின்பனிக்காலம் பிரிவுக்கும், இளவேனில் கூடலுக்குமே ஏற்புடைத்தென்பதை வலியுறுத்தல் காண்க. | சூத்திரம் : 11 | | | | இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் உரிய தாகு மென்மனார் புலவர். |
கருத்து : இது முதிர்வேனிலிற் பிரிந்தார் கார்காலத்து மீண்டுவந்து கூடலும், பின்பனிக்காலம் பிரிந்தார் இளவேனிலில் கூடலும் மரபென்பதை விளக்குகிறது. பொருள் : இருவகைப்பிரிவும் = முன்னையிரு சூத்திரங்களிலும் கூறப்பெற்ற வேனிற்பிரிவும், பின்பனிப்பிரிவும்; நிலைபெறத்தோன்றினும் = பிரிதனிமித்தங்களாக அமையாது, |