| 288 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| | ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. |
கருத்து : இது, முன் “பாடாண் பகுதி நாடுங்காலை நாலிரண்டுடைத்து” எனச் சுட்டிய பாடாண் வகைப் பொருள் எட்டினியலும் பெயரும் கூறுகிறது. பொருள் : (1) கொடுப்போரேத்தி = கொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தலும்; குறிப்பு : இதில் “ஏத்தி” எனுமெச்சத்தை ஏத்தல் வினை எனப் பெயராக்கி வேறு பிரித்தெண்ணல் வேண்டும்; “வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்டதரசு” எனுங் குறளில், ஐந்தெனும் எண் கருதிக் “கற்றறிதலை”க் கற்றலும் அறிதலுமாகப் பிரித்தெண்ணியதுபோல. இதற்குச் செய்யுள்: “பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர். பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே” - புறம். 107 பொருள் : (2) கொடாஅர்ப் பழித்தலும் = பற்றுள்ளத்தால் ஈயாதிவறியாரை இகழ்தலும்; குறிப்பு : ஈயார் பழியும் ஈவோர் புகழாமாதலின், அதுவும் பாடாணாயிற்று. அதற்குச் செய்யுள்: “பண்டும் பண்டும் பாடுந ருவப்ப விண்டோய் சிமைய விறல்வரைக் கவஅற் கிழவன் சேட்புலம் படரினிழையணிந்து புன்றலை மடப்பிடி பரிசி லாகப் பெண்டிரும் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீ ரக்கோ னாகலி னன்று முயங்க லான்றிசின் யானே; பொலந்தேர் நன்னன் மருக னன்றியும் நீயே முயங்கற் கொத்தனை மன்னே; வயங்குமொழிப் பாடுநற் கடைத்த கதவின் ஆடுமழை |