| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 287 |
“களிறு கடைஇய தாட் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணொளிர் வரூஉங் கவின்சா பத்து மாமறுத்து மலர்மார்பிற் றோல் பெயரிய எறுழ்முன் பின் எல்லையு மிரவு மெண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின், நல்ல இல்ல வாகுப, இயல்தேர் வளவ! தண்புனல் பரந்த பூசன்மண் மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற் பிறரகன்றலை நாடே” - புறம். 7 இது, வஞ்சிவகைக் கொற்றவள்ளை; கரிகாற் சோழன் போர்ச்செலவின் புகழும் அவன் பகைவர் நாடழிவின் பரிவுங் கூறுதலாற் கடவுள் கண்ணா வஞ்சிப் பாடாணாயிற்று. இனிக் கொற்றவள்ளை, கடவுள் கண்ணிய பாடாணாதற்குச் செய்யுள் “நேரார் நிலமழிய நீள்மதிலூர் தாமெரியப் போர்மேல் வழுதிபடை போவதற்குக் - கார்குறுதும் நெற்றி விழியோனை நேர்ந்தவன்றாள் பாடுதுநாம் கொற்றந் தரவுலக்கை கொண்டு” இதில், கண்ணுதற் கடவுளை வாழ்த்திப் போர்மேற் செல்லும் பாண்டியன் தமிழ்ப் படையைப் பாராட்டி நெற்குறும் பெண்டிர் பாடுதலாலிது வள்ளைப் பாடாணாதலறிக. | சூத்திரம் : 34 | | | | கொடுப்போ ரேத்திக் கொடார்ப் பழித்தலும், அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும், சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும், கண்படை கண்ணிய கண்படை நிலையும், கபிலை கண்ணிய வேள்வி நிலையும், வேலி னோக்கிய விளக்கு நிலையும், வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉம் |
|