310 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வகைமுறை. இதன்பின் எள்ளல்முதல் விளையாட்டிறுதி தனிவகுத்து எண்ணப்பட்ட முப்பத்திரண்டும், மெய்ப்படு புறக்குறி இயலொப்பால் இனம் புணர்த்து நந்நான்காய்த் தொகுக்குங்கால், நகை முதல் உவகை ஈறாய் “அப்பாலெட்டே மெய்ப்பாடு” எனப் படுபவற்றுளடங்கும். குறியொப்பால் இனம்கூட்டித் தொகை பெற்று வருமிவை குறிமுறையால் எண்வகையியல் நெறிபிழையாமை கருதி இவ்வாறு கூறப்பட்டன என்க. நான்கன் முன் நான்கு “நானான்கா” மாறு, “நான்கன் ஒற்றே லகாரமாகும்” (457); “வகரம் வருவழி (452). . . . . நான்கன் ஒற்றே லகாரமாகும் (453)”; “உயிர் வருகாலை (455). . . . . மூன்றும் நான்கும் ஐந்தென்கிளவியும் தோன்றிய வகரத் தியற்கையாகும்”(456) எனும் தொல்காப்பியர் எழுத்ததிகாரச் சூத்திரங்களாலறிக. இன்னும் “கசதப முதன்மொழி வரூஉங்காலை . . . மூன்றன் ஒற்றே வந்ததொக்கும்” (447) எனவும், “நமவருகாலை, ஐந்தும் மூன்றும் வந்ததொக்கும் ஒற்றியல் நிலையே” (451) எனவும் தெளிக்கும் தொல்காப்பியர், நான்கன் ஒற்று மவ்வாறாகும் எனக் கூறாமையானும், முதற் பத்தெண்களுள் “மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்” எனக்கூறி நான்கன் முதலுக்குக் குறுக்கம் யாண்டும் குறியாமையானும், நானாற்றிசை (களவழி. 6) - நானூறு - நானிலம் - நானூல் - நாலெட்டு - நாலீரைம்பது - நாலிரண்டு. . . . . எனவே பல்காலும் பலவிடத்தும் பண்டைச் சான்றோர் செய்யுட்களில் பயிலுதலானும், ‘ந’கரம் வருங்கால் நான்கன் ஒற்று லகரமாகி முதல் குறுகாது நால் என நின்று, வரு நான்கொடு புணர்ந்து நானான்கென வருதலே தமிழ்மரபாமாறு தேறப்படும். பிந்திய நன்னூலாரும், “ஒன்றுமுத லெட்டீறா மெண்களுள். . . . மூன்றாறேழ் குறுகும்” கூறிற்றிலர். எனவே, நானான்கென்பதே பண்டையோர் கொண்ட செய்யுட்சொல் என்பதும், நந்நான்கென்பது (இலக்கண) நூலாதரவற்ற பிற்காலப் பேச்சு வழக்காதலின் உரையிற் கொண்டமைக்கப் பெற்ற சேரிமொழி என்பதும் தெளிதலெளிதாம். இனி, ‘புறனே’ என்றது உள்ளுணர்வு சுட்டும் புறக்குறியை; தத்தம் நிலையில் தனித்தனிக்குறியால் புறத்தே புலனாகாது கருத்தளவில் வகுத்தெண்ணும் எண்ணான்கு பொருளினின்றும், புறத்தே ஒவ்வொரு குறிக்கு நானான்காய்த் தொக்குப் புலனாகும் |