பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை363

கூறப்படுகின்றன. இதன் பிற்சூத்திரங்களால் வரைந்துடன் வாழும் திருந்திய கற்புக்குரியன விளக்கப்பெறும். எனவே, முன் களவுக்குரியவற்றிற்கும் பின் களவின் வழித்தாய கற்பிற்குரியவற்றிற்கும் இடையே, அச்சிறந்த கற்பறவாழ்வுதரும் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகூறும் இச்சூத்திரம் அமைந்த செவ்வியுணர்ந் துவத்தற்பாற்று. இனி, ‘அழிவில்கூட்டம்’ என்றது, களவிற் போலப் பிறர்க்கு மறைத்து இடையறவுபடுங்கரவுக்காதலைப் போலாது, உலகறிய ஒளியாது ஒழியாதுடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக்குறிப்பு. ‘கூட்டம்’ இங்குக் கூட்டம் தரும் வரைவுவேட்கைக் குறிப்பிற்காதலால் ஆகுபெயர்.

இனி, முட்டுவயிற் கழறலுக்குச் செய்யுள்:

“. . . . . . . . . . . நாரை
 அறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
 கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
 தண்ணந் துறைவற் காணின், முன்னின்று
 கடிய கழற லோம்புமதி; தொடியோள்
 இன்ன ளாகத் துறத்தல்
 நும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே”

(குறுந். 296)

இதில், சிறைப்புறத் தலைவன் வரைவுநீட்டம் கடிந்து கழறற்பாற்றெனத் தலைவி தோழிக்குக் குறிப்பாகச் சுட்டுவதறிக. “பன்முட் டின்றால் தோழிநங் களவே”(அகம். 122) என்னும் அகப்பாட் டடிக்குறிப்பு மிதுவே.

முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள் :

“விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
 கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
 புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம்,
 உள்ளலும் உள்ளா மன்றே, தோழி!
 உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின்
 றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே”

(குறுந். 218)

“நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே,
 இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி