பக்கம் எண் :

410நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

1. “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
 என்ன பயனு மில”
 (குறள். 1100)
2. “நெடுந்கை நின்று நோக்க. . . . . .
  . . . . . . . . . . . . . . . . .
 குடங்கையின் நெடியகண்ணாற் குமரன்மேல் நோக்கினாளே”
 (சிந்தாமணி பதுமை. 125)
3. “எண்ணரு நலத்தினா ளினையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றயொன்
றுண்ணவும், நிலைபெறா துணர்வு மொன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”
 (கம்பர். பாலகாண்டம், மிதிலை. 35)
சூத்திரம் : 6 
 குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.

கருத்து : இது, மேலதற்கோர் புறநடை. மேற்சொன்ன குறிப்புரை எதிர்ப்பட்டார் ஐயுற்றுத் தெளிந்து ஒருவரை ஒருவர் நோக்குங்கால் இருவர் குறிப்பும் ஒத்துழி நிகழும். அன்றேல் நிகழாதென்று கூறுகிறது.

பொருள் : குறிப்பே = ஒருவரின் குறிப்பு நோக்கம்; குறித்தது கொள்ளுமாயின் = தன் குறிப்பை மற்றவர் நோக்கிலும் கண்டு தெளியுமானால்; ஆங்கவை நிகழும் = அவ்வாறு கொண்டவிடத்து நாட்டமிரண்டின் குறிப்புரை நடக்கும்; என்மனார் புலவர் = என்று கூறுவோர் களவு நூலோர். களவு நூலோர் எனுமெழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது.

குறிப்பு : ‘ஏ’ இசைநிறை; ஒழியசை எனினும் ஒக்கும். ‘அவை’ என்றது. மேற்கூறிய நாட்டமிரண்டும் கூடியுரைக்கும் குறிப்புரைகளைச் சுட்டும். எதிர்ந்தார் இருவருள், ஒருவர் குறிநோக்குத் தன் குறிப்பை மற்றவர் நோக்கிற் காணுமிடத்து, அவ்விருவருள்ளும் நாட்டமிரண்டின் குறிப்புரை நிகழ்தற்குச் செய்யுள் மேற்சூத்திரத்தின்கீழ்க் கூறப்பட்டது. ஒருவர் குறிப்பு தான் குறித்ததை மற்றவர் கண்ணிற் கண்டுகொள்ளாவிடத்து அக்குறிப்புரை நிகழாமை “முறுவலென்னும் தோழியை ஐயன்காண, ஓடரிநெடுங்கண் என்னும் ஓலையை எழுதிவிட்ட” அநங்கமாலையின் குறிப்பு, சீவகன் கண்ணில்தன் குறிப்பைக்