பக்கம் எண் :

44நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“நுமர்வரி னோர்ப்பி னல்லது, அமர்வரின்
 முந்நீர் மண்டில மனைத்து மாற்றாத்
 தெரிகணை விடுத்தலோ விலனே;
 அரிமதர் மழைக்கண் கலுழ்வகை எவனோ?”

இப்பழையஉரை மேற்கோட் செய்யுளில், தமர் வரவு கருதி அதனானேரும் பிரிவினுக்கஞ்சி உடன்போக்கில் தலைமகளிரங்கத் தலைவன் தேற்றுங் குறிப்பறிக.

“ஏதங் கருதா திளையோய்நீ என்னோடு
 போதரு வாய்கொல் புகலென்ற - காதலர்பின்
 வந்தேனை விட்டு மறைந்தார்; எமர்வெறுத்தேற்
 கெந்தநிலை எய்து மினி”

எனும் வெண்பாவில், உடன்போக்கிடையில் தொடருந் தலைவி தமரை அவள்முன் இடருறப் பொருவதை வெறுத்துத் தலைவன் மறைய, தற்கொளவந்த தமரைமறுத்துக் கற்பு வற்புறுத்துந்தலைவியினிரக்கம் கூறப்பெறுதல் காண்க.

சூத்திரம் : 16 
 கலந்த பொழுதுங் காட்சியு மன்ன.

கருத்து : இதுவும், ஐந்திணை வகுப்பில் அடங்காதனவாய் அகப்பகுதியில் உரிப்பொருள் ஆவன இன்னுஞ் சிலவற்றைக் கூறுகின்றது.

பொருள் : கலந்த பொழுதும் = ஒத்த தலைமக்கள் தம்மிடைப் பாலதாணையின் முதல் எதிர்ப்பாட்டில் நிகழ்வும்; (கலந்த) காட்சியும் = அவ்வாறு தலைப்பட்டார் தம்முள் அறிவுடம்படுத்தற்குக் கூட்டிக் குறிப்புரைக்கும் நாட்டமும், அன்ன = (மேலச் சூத்திரத்திற் கூறியது போல) ஏற்புழி அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாதற்குரியவாகும்.

குறிப்பு : உம்மை யிரண்டும் முன்னைச் சூத்திரத்தில் ஓதியவற்றுடன் வைத்தெண்ணத்தகும் என்பதைக் குறிப்பதால் இறந்தது தழிஇய எச்சவும்மை. அன்ன என்பது, மேற்கூறிய கொண்டு தலைக்கழிதல் பிரிந்தவணிரங்கல் என்பனவற்றை இங்குக் கூறிய கலந்தபொழுதும் காட்சியும் உரிப்பொருளியல்பால்