| 444 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நின்றாங்குத் தரும் நேரிய செம்பொருளாலும் தெளிவாகும். அம்மெய்ப் பொருளை இங்கு இனிமேல் ஆராய்வோம்; காமஞ்சான்ற கடைக்கோட்காலை = முன் அம்பல் அவர்கட்கிடனாய், அவை தரும் அச்சத்தாலும் பிற்பல சிறுதுனிகளாலும் சிறவாததாய்ப் பிறகு உழுவலன்புடையாரிருவரும் மணந்து பொருள் படைத்து மாண்டமனையறம் நிகழ்த்திக் கற்புக் கனிந்த அற்புக் கூட்டம் வீறு பெற்றுச் சிறந்த நாளில்; ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு = தமக்கு எஞ்ஞான்றும் அன்புறும் இயற்கைத் துணையாகச் சிறந்த தம்மக்களொடும் தம்மனையறத்திற்கு உரிமைச் சுற்றமாகிய பணியாளர் முதலிய பிற செயற்கைத்துணைவர் பலரொடும்; கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் = தம் உழுவலன்பால் மனைமாண்ட கற்புக் கூட்டத்திற்கு உரிமையுடையோரான தலைவனுந் தலைவியும் இவை பல்லாற்றானும் மாண்புபெற்ற அன்பு கனிந்த கற்புக் கூட்டம் அனுசரித்தல்; இறந்ததன்பயனே = முன் உளம் பொய்யாத உழுவலன்பால் தாமே தலைப்பட்டுத் தழுவி வழுவாக் களவொழுக்குக் கடைகூட்டி வைத்த பயனன்றிப் பிறிதன்றாம். சுருங்கச் சொல்லின், நல்வாழ்வெய்தி இல்வாழ்வார் இருமுதுகுரவரும் பின் பலவாறு சிறந்த தம் கற்பின் கூட்டமாய மனைமாட்சிப் பேறெய்தலெல்லாம், முன் அவர் பிறர் கூற உற்ற சுற்ற முணர்ந்து உளையச் சாலாத களவொழுக்கில் அவ்விருவரின் செவ்விய அறனிறவா அன்பொடு புணர்ந்த தூய காமக் கூட்டம் தொடர்ந்து துறைமுற்றிக் கடைகூட்டிய பயனேயாம் என்பதே இச்சூத்திரப் பொருளாகும். இஃது, அகப்பகுதியில் இக்கற்பியலில் இச்சூத்திர நிலை, இதன் சொல் அமைதி, தொடர்தொறும் செறிந்த சொல்லாக்கக் குறிப்புக்கள், தமிழ் வழக்கு, நூல் நுதலும் ஆசிரியர் குறிக்கோள் ஆகிய எல்லாவற்றோடும் இயைபும் இயலழகும் பெற்று முரணெதுவுமின்றிக் கிடைக்கும் நேரிய பொருளாம். செய்யுளியல் | சூத்திரம் : 115 | | | | ஒத்தா ழிசையு மண்டில யாப்பும் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. |
|