பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை443

கொள்கை ஆரியருக்கு முடன்பாடில்லை என்றே தெரிகிறது. எதுவாயினுமாகுக.  எனைத்தாயினும் இது, “அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை”, “அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (துறவாகிய) புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவதெவன்” என்று இல்வாழ்ந்து செம்மாக்குந் தமிழர் மரபாகாது. துறவு நிலைகொள்ளாமல் வீடுபேறெய்த வொண்ணாதென்னும் பிறசமயத்தாரோ ஆண்மகனே அஃது அடைபவனாவான், பெண்ணாய்ப் பிறந்தோர்க்கு வீடுபேறெண்ணற் கில்லையென்பர்.

ஈண்டுக் கிழவனையுங் கிழத்தியையும் ஒருங்கே வீடுபெறவைக்கும் கூட்டுத் துறவொன்று கூறுவது எந்த வேதத்துணிவென்பதை நச்சினார்க்கினியர் விளக்காததால் அதை நாம் தெளியொணாது. இஃது எதுவாயினுமாகுக. தமிழ்கூறு நல்லுலகில் வழங்கும் மரபும் தமிழ் நூல் இலக்கண இயல்புகளுமே கூறவந்த தொல்காப்பியர், தங்குறிக்கோளை மறந்து ஈண்டுத் தமிழரின் அகப்புறப்பகுதிகளில் பிறபிற சமயக் கோட்பாடுகளையும் பேதுறப் பெயர்த்துப் பேசித் தலைதடுமாறினரெனக் கொள்ளப் போதிய காரணமில்லை. அதனால் இவ்வுரை ஆசிரியர் கருத்தாகாமை விளக்கமாம்.

(5)  இறுதியாகக் கற்பின் திறம் மலர்ந்த இல்லற இலக்கணமும் இன்பக் கூறும் கூறி முடித்துக் கடைசியில் துறவில் கற்பியலை முடித்துக் காட்டினரெனற்கும் இங்கு இடமில்லை; இது கற்பியலின் கடைசிச் சூத்திரமுமன்று. வீடுபேறுகருதி. அதுதர வன்மையற்ற கற்பறத்தைக் களைந்துவிட்டுச் சிறந்த துறவு புகவைத்த பிறகு, மனையறமாண்புக்கே வேண்டப்படும் வாயில்களையும், பிரித்து வினைமுடித்துத் தன் தலைவியின் புணர்ச்சிவேட்டுத் தாழாது விரைந்து மீளும் தலைவனின் மரபுகளையும் விளக்கி ஆசிரியர் மீண்டுஞ் சூத்திரிப்பது பொருந்துவதன்றே.

இனைய பிற பின்னைய, சூத்திரங்கள் பேசுவது கற்பாகிய இல்லற இலக்கணமேயாதலால், இவற்றின் முன்னிற்கும் ‘காமஞ்சான்ற’ எனும் இச்சூத்திரம் ‘வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்’ இல்வாழ்வாரின் ‘அன்புமறனு’முடைய மனையறவீறு கூறுதலையே நுதலும் அன்பினைந்திணைப் பகுதியாகிய கற்பியலில் மனையறச் சிறப்பே விளக்குவதியல்பாகும். இதுவே ஆசிரியர் கருத்தாமென்பது. இச்சூத்திரச் சொற்றொடர்கள் நிரல்பட