| 442 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
போல்வதன்றோ? இனையதொரு துறவின் திறத்தைத் தொல்காப்பியர் இங்குச் சுட்டிச் சூத்திரிக்கும் நோக்கந்தானென்னோ? (4) இனி, “இல்லறத்தின் பின்னர்க் கடைநாள் துறவுநிலை நின்று மெய்யுணர்ந்து வீடுபெறுப; இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இல்லறம் என்பது இதன் பயன்” எனும் நச்சினார்க்கினியர் முடிபு, சைனர்துணிபா?அன்றி ஆசிரியர் சிலருவக்கும் வைதிகமுடிபா? இனித் “துறவின்றித் துறக்கமில்லை; அதனால் வீடுபெற விரும்பும் இல்வாழ் வாரெல்லார்க்கும் துறவு இன்றியமையாததே” என்பது சமணர்மதம். சமண சமயமும் அதன் கொள்கைகளும் தமிழகத்தில் மூன்றாந் தமிழ்ச்சங்க முடிந்து சில நூற்றாண்டுகட்குப் பின்னரே பரவலாயின. சங்கத் தொகைநூல்கள் அனைத்துக்கும் சில நூற்றாண்டுகளாவது முந்தியது தொல்காப்பியம் என்பது தமிழர் யாவர்க்கும் ஒப்பமுடிவதாகும். தொல்காப்பியத்துக்குப் பிறகே அதை நூலாகக் கொண்டெழுந்த குறளில் இச்சமணக்கொள்கைக்கு மாறான தமிழர் பழவழக்குமரபற வொழுக்கங்களே கூறப்பெறும். குறள் கூறும் அறம் தமிழர் மரபென்பதில் ஐயமில்லை. வீட்டின்பமாகிய ‘சிறப்பீனுமறம்’; ‘அறனெனப்பட்டதே யில்வாழ்க்கை’; அவ்’வறத்தாற்றி னில்வாழ்க்கை’யை; ‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்’, அஃது அவ்வில்வாழ்வார் பிறந்துழலும் ‘வாழ்நாள் வழியடைத்து’ வீட்டின்பச் சிறப்பீனும். இவ்வறனிழுக்கா இல்வாழ்க்கை, வீடுபெற விரும்பித் துறவு மேற்கொண்டு நோற்பாரினோன்மையுடைத்து. ‘ஆற்றினொழுக்கி’ என்ற குறளில் தமிழர் மனையற மரபு மாட்சி வலியுறுத்தப்படுகின்றது. இத்தமிழ் மரபுக்கு முழுதுமாறாகத் துறவு துறக்கம் பெறுதற்கு இன்றியமையாத துணையெனப் பின்னெழுந்த சமணர் கொள்கையை அறப்பழைய தமிழர் மரபு கூறும் தொல்காப்பியர், தமிழர் மனையறம் கூறும் கற்பியலிறுதியில் தமிழரெல்லார்க்கும் வற்புறுத்த இச்சூத்திரம் செய்தாரென்பது எத்துணையியை பின்மையுடைத்து என்பதை எண்ணுவார்க்கு உண்மை தெளிவாகும். உலகத்தையும் மனையறவாழ்க்கையையும் வெறுக்குந் துறவு துறக்கம் பெறுதற் கின்றியமையாததென்னும் வேதகாலக் |