பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை441

இதில் காணப்பெறும் விபரீத வெதிரேக விளைவுகள் வியப்பினை விளைப்பனவாம்.

(1)  முதலில் மனையறமாண்பு விளக்கும் கற்பியலில் துறவற வீறு கூறல் மாறுபாடாம். கற்பியலில் இல்லற விருப்பை விளைப்பதே முறையாக அதை வெறுத்து விலங்குந் துறவின் சிறப்பை விரிப்பது விந்தையன்றோ!

(2)  துறவு கூறுவதே இச்சூத்திர நோக்கமாயின், இதில் அக்கருத்தோடு பொருத்தமற்ற பல சொற்றொடரை ஆசிரியர் அமைத்து வைத்தது வியப்பினும் வியப்பே. ‘பிறப்பறுக்கலுற்றார்க்கு (தம்) உடம்பும் மிகை’ ஆதலால் ‘மற்றுந் தொடர்ப்பாடு’ எதுவும் அவர்க்கு இடர்ப்பாடே யாமெனக் கூறவேண்டா. “சான்றோர் கூறவும் வேண்டாது தாமே எல்லாவற்றையும் ‘பற்றறத்துறக்கும்’ தலைவனுந் தலைவியும், தம்மில் ஒருவரை ஒருவர் துறவாமல் தொடர்வதே “தவமறைந்தல்லவை செய்யும்” தவறாகும். அதனோடும் அமையாமல், துறவுபுகும் கிழவனும் கிழத்தியும் (உரிமைச்) சுற்றத்தோடு துவன்றித், தாம் துறவை விரும்பாமல் இல்லறஞ் செய்தலையே விரும்பிய மக்களோடு கூடிச் ‘சிறந்ததான துறக்கந்தரும் துறவினைப்பயில முயலல் படிற்றொழுக்க மாவதன்றித் தவத் துறவு ஆவதன்றே. துறக்கம் வேண்டித் துறப்பவரிருவர் (கிழவனுங் கிழத்தியும்) அதனை வேண்டாது இல்லறஞ் செய்தலையே விரும்புந் தம்மகளொடுஞ் சுற்றத்தொடும் துவன்றியது எற்றுக்கோ? இவ்வாறு யாரொடுந் தொடர்பறுக்காமல் எனைவரொடுந் துவன்றித் துறவுபுகும் இருமுது கிழவரும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு விடுத்துத் “தீரத்துறந்து தலைப்பட்டாராகார்; மயங்கிவலைப்பட்ட மற்றையவரே” யாகித், தவம் தாம் மேற்கொள்வ தவமாகத் ‘துறந்தார் போல் வஞ்சித்து வாழும் வன்கண்ண’ ராகி முடிவர்.

(3)  இன்னும், பொறியெறிந்து ஐந்தன் புலத்தையட்டு ‘நோற்றலின் ஆற்றல் தலைப்படுதலே’ அறத்துறவாகும். அதற்கு மாறாக நுகர்ச்சி யெல்லாமுடிந்தமைந்து, பொறிகளோடு புலனுஞ்செத்து, உளத்தோடு உடலுந்தளர்ந்து, “கடையாயினார், நிற்குநிலைஞ எய்த்தித்தள்ளாடும் (குடுகுடு) கிழவனும் கிழவியும் தமக்கு இன்னும் பற்றுக்கோடா யுற்றாரெல்லாம் சுற்றத்தொடர் இறுகப்பற்றித் துறவுபுகுவது ‘தெண்ணீரடுபுற்கை’ உப்பு காடி முதலாய துப்புரவு ஏதுமில்லார் பெருநோன்பு பேசுவது