| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 67 |
என்பதை இச்சூத்திரத்தால் தெளியவைத்தார். மேற்சூத்திரத்திற் கூறிய பிரிவினிமித்தம் மூன்றனுள் இரண்டே உயர்ந்தோர்க்குரியன என இச்சூத்திரம் கூறுதலால், எஞ்சிய பகைவயிற்பிரிவு உயர்ந்தோர்க்குப் போலவே பிறர்க்கும் உண்டென்பது பெறவைத்தார். உயர்ந்தோரின் ஏவல் மேற்கொண்டொழுகுவாரும், அவரேவியவழிப் பகைவரொடு பொருதற்குரிய ராதலின், பகைவயிற் பிரிவு அவர்க்கு விலக்கப்படாமையுணர்க. அதுவேபோல், பொருட்பிரிவும் எல்லோருக்கும் பொதுவாகவும். இனி, இச்சூத்திரத்திற்கு நால்வகை வருணத்துள் அந்தணர் அரசராகிய முதல் இருவகையினரே ஓதல்தூது மேற்கொள்ளற்குரியர் எனப்பிறர் கூறுமுரை பொருந்தாது. நான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகளாதலானும், பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்நால் வகை வருணங்கள் உலகியலில் வழங்காமையானும், தொல்காப்பியர் தாம் தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்தலானும், அகத்திணையியலில் தமிழ்நாட்டு நானிலமக்கள் குறிக்கப்படுகின்றாரன்றி நான்கு வருணத்தாராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும், அவருரை அமைவுடையதன்று. அது சூத்திரக் கருத்தன்மை, இதில் உயர்ந்தோரென்பதற்கு முதலிரு வருணத்தாரென்று உரையாசிரியரும், முதல் மூன்று வருணத்தார் என்று நச்சினார்க்கினியரும் தம்முள் மாறுபடக் கூறுதலானும் தெளியப்படும். அன்றியும், வணிகரை விலக்கி அந்தணரும் அரசருமே இவ்விருவகைப் பிரிவிற்குரியர் என்று தாம்கூறுதற்குக் காரணம், ‘ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும் (இவ்விருவருவணத்தாரே) உயர்வுடையராதலின் (இவரை) உயர்ந்தோரென்றார்’ என்பர் இளம்பூரணர். ஒழுக்கம் குணம் செல்வங்களால் வணிகர் மற்றைய இருபிறப்பாளர்க்குக் குறைந்தவர் என்பதுண்மையன்றாகலானும், செல்வத்தால் வணிகர் ஏனையரினும் தாமே உயர்வுடையராதலானும், வணிகரும் நானிலத்தமிழரும் ஓதற்குரியரேயாதலானும் இதுவும் சூத்திரக் கருத்தாகாமை பெறப்படும். | சூத்திரம் : 27 | தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. |
|