பக்கம் எண் :

66நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொருள் : ஓதல் பகையே தூது இவை = கல்வி கற்றலும், பகைகடியப் பொருதலும், தம்முள் பகைத்த பிறரைப் பொருத்தற்பொருட்டு வாயிலாகச் செல்லுதலும் ஆகிய இவை; பிரிவே = பிரிதற்கு நிமித்தமாயப் பாலைத் திணையாகும்.

குறிப்பு : இதில் ஏகாரமிரண்டும் அசை. ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது தன்னாட்டிற்கும் தன்னரசற்கும் பகையாவாரோடு போர்கருதிப் பிரிதல். தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருத்தற் பொருட்டுப் பிரிதல்.

சூத்திரம் : 26 அவற்றுள்
ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன.

கருத்து : இது, மேற்சூத்திரம் கூறும் பிரிவு மூன்றனுள் இரண்டற்குரியாரை உணர்த்துகிறது.

பொருள் : அவற்றுள் = மேற்குறித்த மூன்றனுள்; ஓதலுந்தூதும் = ஓதற்பிரிவும் தூதுபற்றிய பிரிவும்; உயர்ந்தோர் மேன = பெயரும் வினையும்பற்றிய திணைநிலைப் பெயர்க்குரியார் பலருள்ளும் அடியோர் வினைவலர் ஏவலர் போல்வாரல்லாத உயர்ந்தோர்க்கே உரியவாகும்.

குறிப்பு : அடியோர், வினைவலர், ஒருவருக்கு ஏவலர், ஏவன் மரபினேனையோர், இந்நால்வரும் பிறரேவலை எதிர்பார்த்து வாழ்பவராதலின் ஓதலும் தூதுமாகிய உயர்ந்தோர் தொழிலேற்றற்கு உரிமை கொள்ளார். அவரொழிந்த நானிலத் தமிழ்க்குடி மேன்மக்களே அவற்றை மேற்கொள்ளுதற்குத் தகுதியுடையராதலின், இவை அவ்வுயர்ந்தோர் மேலன என்று விளக்கப்பட்டன.

உயர்ந்தோரல்லாத அடியார் முதலிய நால்வர்க்கும் அகத்திணையொழுக்கங்கள் கடியப்படாவென மேல் இரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்நூலார், அவ்வொழுக்கங்களுள் ஒன்றான பிரிவிற்குரிய நிமித்தங்களுள் ஓதல் தூதாகிய இரண்டிற்கும் அவர் உரியராகாமையான், அவை பற்றிய பிரிவிற்கும் அவர் உரியராகார்