| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 69 |
நாள்வரை நிறுத்துத்தாம் சொல்லிய பொய்யன்றி மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழவே” (பாலைக்கலி . 30) | 2. | “கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே” | | | (பேயனார், ஐங்குறுநூறு. 451) |
(ii) வேந்தனொடு சிவணிய ஏனோர் சேறற்குச் செய்யுள்: | 1. | “காய்சின வேந்தன் பாசறை நீடி நந்தோ யறியா வறனி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனா தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே” | | | (கழார்க் கீரனெயிற்றியார், அகம். 294) |
| 2. | “கூதிர் நின்றன்றாற் பொழுதே; காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ?தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குற் சூழ அஞ்சுவர விறுத்த தானை வெஞ்சினவேந்தன் பாசறையோரே” | | | (உம்பற்காட்டிளங்கண்ணனார், அகம். 264) |
| சூத்திரம்: 28 | மேவிய சிறப்பி னேனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவே. |
கருத்து : இது, மேற்கூறிய ஓதல் பகை தூது ஒழிய காவல் பொருளெனப் பிறவகைப் பிரிவுகளையும், அப்பிரிவுகளுக்குரியாரையுங் கூறுகின்றது. |