பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை97

எனவரும் ஐங்குறுநூற்றுச் (301) செய்யுமளுமது.

தோழி, தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள் வருமாறு :

“நிலந்தொட்டுப் புகாஅர், வான மேறார்,
 விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்,
 நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
 குடிமுறை குடிமுறை தேரிற்
 கெடுநரு முளரோநங் காத லோரே. ”

(குறு. 130)

“பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத்
 தேரக லல்குல் அவ்வரி வாட
 இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
 புல்லரை யோமை நீடிய
 புலிவழங் கதர கானத் தானே. ”

(ஐங். 316)

எனும் ஐங்குறுநூற்றுப் பாட்டுமதுவே.

நீக்கலின் வந்த தம்முறு விழுமம் தோழி கூறுதற்குச் செய்யுள்:

“அன்னை வாழியோ அன்னை, நின்மகள்
 என்னினும் யாயினும் நின்னினும் சிறந்த
 தன்னமர் இளந்துணை மருட்டலின் முனாஅது
 வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
 மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம்
 விழைவுடை உள்ளமொடு உழைவயிற் பிரியாது
 வன்கண் செய்து சென்றனள்;
 புன்கண் செய்தல் புரைவதோ அன்றே. ”

தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளற்குச் செய்யுள்:

“புள்ளு மறியாப் பல்பழம் பழுநி
 மடமான் அறியாத் தடநீர் நிலைஇச்
 சுரநனி இனிய வாகுக வென்று
 நினைத்தொறுங் கலிழு மென்னினும்
 மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் மூரே”

(ஐங். 398)