| 98 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கித் தோழி கூறுதற்குச் செய்யுள் : ‘அரிதாய அறனெய்தி’ என்னும் பாலைக் கலியில், “கடியவே கனங்குழாய் காடென்றார், அக்காட்டுள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே” (கலி. 10) என்பது போன்ற தலைவன்மொழிந்தவற்றை எடுத்துக் காட்டி, “இணைநல முடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர்; மனைவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன; நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே. ” எனக்கூறி, அழியும் தலைவியை ஆற்றுவித்தல் காண்க. “தண்கயத் தமன்ற வண்படு துணைமலர்” எனும் மருதளினநாகனார் அகப்பாட்டில் (அகம். 59), “வருந்தினை வாழியர் நீயே; . . . . . . . . . . . . . . . . . . தாம்பா ராட்டிய காலையு முள்ளார் பிரிந்து சேணுறைநர் சென்ற வாறே, புன்தலை மடப்பிடி உணீஇயர் அங்குழை நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுள் படிஞிமிறு கடியும் களிறே. ” என்று எடுத்துக்காட்டி அழியும் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலும் காண்க. இனி, ‘என்றிவை எல்லாம்’ எனப் பொதுப்படக் கூறுதலான், தோழி ‘இது பருவமன்று’ என்பது போன்ற கூற்றுக்கள் நிகழ்த்தி ஆற்றுவித்தலையுங் கொள்க. அதற்குச் செய்யுள் வருமாறு: “மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை; |