10

பத்துப்பாட்டு

வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
70 றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயி
னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்

"வான்றோய் வெல்கொடி" (பதிற். 69 : 1); ‘வென்று வென்றெடுத்த கொடிதான் நுடங்குமதில்' (சிலப். 15 : 217, அடியார்.)

68. மதில்மேற்பந்தும் பாவையும் நாற்றல்: "பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு, மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு, முந்தை மகளிரை யியற்றி" (தொல். புறத்திணை. சூ. 12, ந. மேற்.), "பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கு, முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றூக்கி" (தணிகை. சீபரிபூரண. 58), "பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப் பந்தொடு பாவைக டூங்கித், தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சிற் றடப்பெரு நொச்சியும்" (திருநாகைக்.திருநகரப். 90)

வரிப்புனைபந்து : "வரியணி பந்தும்" (நற். 305 : 1), "வரிப்பந்து கொண்டொளித்தாய்" (பு. வெ. 238).

வரியென்னு முதனிலைத்தனிவினை வரிந்தென்று வினையெச்சப் பொருள்பட்டு வந்தது ; வரிப்புனை பந்து, வரிந்து புனைந்த பந்தென வருதல் பற்றித் தொகைவிரியென இரண்டே யென்பர்; இ. கொ. சூ. 66, 84, உரை; நன். வி. சூ. 351.

69.போரருவாயில் : " புலாஅ லம்பிற் போரருங் கடிமிளை" (புறநா. 181 : 5)

70.திருவீற்றிருந்ததீதுதீர் : "திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்" (நெடுநல். 89); மு. "திருவீற் றிருந்த திருநகர் வரைப்பின்" (பெருங். 1. 40 : 232)

71."மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (மதுரைக். 429); "மாடமலி மறுகிற் கூட லாங்கண்" (அகநா. 346 : 20); " மாட மறுகின் மருவி மறுகுறக், கூடல் விழையுந் தகைத்து", "நான்மாடக் கூடனகர்", (பரி. 20 : 25-6, "உலகமொரு"); "மதிமலி புரிசை மாடக் கூடற் பதி" (திருமுகப்பாசுரம்); கொடிமாடக்கூடல்" (சிலப். குன்றக். பாட்டுமடை: 24)

73. இது வல்லிசை வண்ணத்திற்கு மேற்கோள்;தொல், செய். சூ. 217, பேர்; யா. வி; யா. கா. ஒழிபு. சூ. 8, உரை.

71-3. "முருகாற்றுப்படையுள், ‘மாடமலி...............துஞ்சி' என்ற வழி, ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க"( தொல். புறத். சூ. 27, இளம்.)