பத்துப்பாட்டு 45. மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் - மரல் பழுத்தாற் போன்ற துளும்பு நீரையுடைய கொப்புளம், 46. 1நல் பகல் அந்தி நடை இடை விலங்கலின் - நன்றாகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்தலாலே, 47. பெடை மயில் உருவின் பெரு தகு பாடினி - பெடைமயிலருகு நின்ற மயில்போலும் சாயலினையுமுடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி, கூந்தலினையும் நுதலினையும் (25) புருவத்தினையும் கண்ணினையும் (26) வாயினையும் (27) பல்லினையும் (28) காதினையும் (30) எருத்தினையும் (31) தோளினையும் கையினையும் (32) விரலினையும் (33) உகிரினையும் (34) முலையினையும் (36) கொப்பூழினையும் (37) நடுவினையும் (38) அல்குலினையும் (39) குறங்கினையும் (40) சீறடியினையும் (42) உருவினையுமுடைய பாடினியென்க. இங்ஙனம் சீறடியுங்கூட்டி எண்ணாக்கால் தலைமுதல் அடியீறின்றாகக் கூறிற்றாம். 48. பாடின பாணிக்கு ஏற்ப - பாடின தாளத்திற்குப் பொருந்த, 48 - 9. நாள் தொறும் களிறு வழங்கு அதர் கானத்து அல்கி - நாடோறும் யானையுலாவரும் வழியையுடைய காட்டிடத்தே தங்கி, 50 - 51. [ இலையின் மராத்த வெவ்வந் தாங்கி, வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கின் :] இலை இல் மராத்த வலை வலந்தன்ன மெல் நிழல் மருங்கில் - இலையில்லாத 2மராத்திடத்தனவாகிய வலையை மேலே கட்டினாலொத்த மெல்லிய நிழலினிடத்தே, எவ்வம் தாங்கி - கொப்புளால் (45) வந்த வருத்தந்தாங்கி, இனி, ஞாயிற்றின் வெம்மையால் தனக்குவந்த எவ்வத்தைத்தாங்கி இலையில்லாத மராமரமென மராமரத்தின்மேல் ஏற்றுதலுமாம். 52. காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்டபின்பு. பொருந (3), பாடினி (47) செந்நிலனொதுங்கலின் (43) அவளடிகள் (42) பரற்பகை யுழந்த நோயொடுசிவணித் (44) தம்மிடத்தே கொண்ட மொக்குளால் (45) தனக்கு வந்த வருத்தத்தைத் தாங்கித் (50) தான் நடையைத் தவிர்தலாலே (46) கானத்தின் (49) மென்னிழன் மருங்கில் (51) தங்கிப் (49) பாலையாழை (22) வாரியும் வடித்தும் உந்தி
1 நன்பகல் - உச்சிக்காலம்; கலித். 74 : 10, ந; பு. வெ. 39, உரை. 2 மரா - மராமரம் ; மலைபடு. 395; இது சுள்ளியெனவும் வழங்கும்; குறிஞ்சிப். 66, ந.
|