107

2 - பொருநராற்றுப்படை

யும் உறழ்ந்தும் (23) வாசித்து, பாடினி பாணிக்கேற்பச் (48) சீருடை நன்மொழி நீரொடுசிதறிக் (24) காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றையென முடிக்க.;

கடன்கழித்தல் - தடாரியை வாசித்தல்.;

53 - 4. பீடு கெழு திருவின் பெரு பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை 1 மூவரும்கூடி - பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய பெயர்களையும் வலியையுடைய முயற்சியையும் வெற்றிமுரசு முழங்கும் படையினையுமுடைய சேர சோழ 2பாண்டியர் தம்மிற் பகைமை நீங்கிச் சேர்ந்து,;

55. அரசு அவை இருந்த தோற்றம் போல - செல்வக்குறைபாடின்றி அரசிருத்தற்குரிய அவையாகவிருந்த தோற்றரவுபோல,;

தோற்றம்போல இன்மை தீரவந்தனென் (129) என மேலே கூட்டுக.;

இனி, அரசவையிருந்த தோற்றம்போல வலிவும் மெலிவும் சமனுமாகப் பாடுதலைப் பற்றியவென்று பாட்டின் மேலேற்றிப் பொருள் கூறின், குலமும் செல்வமும் வீரமுமுதலியவற்றால் தம்மில் ஒத்தாரை உவமித்தலின், அவர்க்கும் வலிவும் மெலிவும் சமனுமென்னும் குணங்கள் எய்துமாதலின், அங்ஙனங்கூறல் பொருந்தாமையுணர்க; அன்றியும் பயனே ஈண்டு உவமை யென்று உணர்க.

இனிப்பாட்டு 2நிருத்த கீதவாச்சியத்தை யுடைமையின், அரசரோடு உவமித்தாரென்பாருமுளர்.

56 - 7. பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் கோடியர் தலைவ - மிடற்றுப்பாடலைத் தொடங்கி யெழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்தே யுடைத்தாகிய யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே,;

இவன் 3போர்க்களம்பாடும் பொருநனாதலானும், கூத்தரில் இவனிற் சிறந்த கூத்தர் இன்மையானும் இங்ஙனம் கூறினார்.

57. கொண்டது அறிந - பிறர் மனத்துக்கொண்டதனைக் குறிப்பால் அறியவல்லாய்,


1 மூவரென்பது சேர சோழ பாண்டியர்களைக் குறிக்கும் தொகைக் குறிப்புச் சொல்லாகத் தொன்று தொட்டு வழங்கப்படும்; "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" (தொல். செய். சூ. 79)

2 இவை மூன்றும் ‘கொட்டாட்டுப்பாட்டு' எனத் தமிழில் வழங்கப்பெறும்; "கொட்டாட்டுப்பாட்டாகிநின்றானை", "கொட்டாட்டுப் பாட்டொலியோவாத்துறையூர்" (தே); "கொட்டாட்டுப் பூசாந்தம்" (தக்க. 114, உரை)

3 பொருநரும் ஏர்க்களம்பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம் (தொல். புறத்திணை. சூ. 36, ந.)