108

பத்துப்பாட்டு

58. அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது - வழியறியாமையினாலே இவ்வழியைத் தப்பி வேறொரு வழியிற் போகாதே,;

59. ஆறு எதிர் படுதலும் நோற்றதன் பயனே- இவ்வழியிலே என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப்பயன்,;

60. [ போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந :] புகழ் மேம்படுந போற்றி கேண்மதி - புறத்தார்புகழை அரசவைகளிலே மேம்படுத்தவல்லாய், யான்கூறுகின்றவற்றை விரும்பிக்கேட்பாயாக;;

61 - 2. ஆடுபசி உழந்த நின் இரு பேர் ஒக்கலொடு நீடு பசி ஒராஅல் வேண்டின் - அடுகின்ற பசியாலேவருந்தின நின்னுடைய கரிய பெரிய 1சுற்றத்தோடே தொன்று தொட்டு வந்த பசி நின்னைக் கைவிடுதல் விரும்புவையாயின்,;

62 - 3. நீடு இன்று எழுமதி - நீட்டித்தலின்றி எழுந்திருப்பாயாக;

வாழி - நீ வாழ்வாயாக;

63. ஏழின் கிழவ - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரமென்னும் நரம்பு ஏழின்கண்ணும் உரிமையுடையாய்,;

64. [ பழுமர முள்ளிய பறவையின் யானும் :]

யானும் பழுமரம் உள்ளிய பறவையின் - செல்வ மெய்திய யானும் முன்பு பழுத்தமரத்தை நினைத்துச் செல்கின்ற புட்போல,;

64 - 5. அவன் இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் - அவனுடைய இழுமென்றெழும் ஓசையினையுடைய அகலமுடைத்தாகிய மதிலில்.;

66. நசையுநர் தடையா நல் பெரு வாயில் - நச்சிவந்தார்க்குத் தடையில்லாத நன்றாகிய பெரிய கோபுரவாயிலின் கண்ணே,

67. இசையேன் புக்கு - வாயிலோனுக்குக் கூறாமற்புகுந்து,;

என் இடும்பை தீர -என்னுடைய மிடிதீர்தல் காரணமாக,

68. எய்த்த மெய்யேன் எய்யேனாகி -2முன்பு இளைத்த உடம்பையுடைய யான் அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பின்பு இளைப்புத்தீர்ந்து,;

69 - 70. பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப கை கசடு இருந்த என் கண் அகல் தடாரி - படம்விரித்த பாம்பினது பொறியை யொப்பக் கையினது வடுப்பட்டுக்கிடந்த எனது கண்ணகன்ற உடுக்கையில் தோற்றுவித்த,;


1 "பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு" (பெரும்பாண், 25)

2 "வென்வே லண்ணற் காணா வூங்கே, நின்னினும் புல்லியே மன்னே யினியே, இன்னே மாயினே மன்னே" (புறநா. 141 : 7 - 9)