109

2 - பொருநராற்றுப்படை

71 - 3. 1[ இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர், வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய, லொன்றியான் பெட்டா வளவையின் :]

இரு சீர் பாணிக்கு ஏற்ப ஒன்று யான் பெட்டா அளவையின் - இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டிணை யான் பேணிப் பாடுவதற்கு முன்னே,

விரி கதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் - விரிகின்ற கிரணங்களையுடைய வெள்ளியெழுந்த செறிந்த இருளையுடைய விடியற் காலத்தே,;

73 - 4. ஒன்றிய கேளிர் போல கேள் கொளல் வேண்டி - முன்பே தன்னோடு பொருந்திய நட்டாரைப்போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,;

75. வேளாண் வாயில் வேட்ப கூறி - தான் உபகரித்தற்கு வழியாகிய 2இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக்கூறி,;

76. கண்ணில் காண நண்ணு வழி இரீஇ - தன் கண்ணிலே காணும் படி தனக்கு அண்ணிதான இடத்திலே என்னை இருத்தி,;

77. பருகு அன்ன அருகா நோக்கமோடு - தன்னைக் கண்ணாற் பருகுந் தன்மையையொத்த கெடாத பார்வையாலே,

78. [ உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ :] என்பு உருகு பவைபோல் குளிர்கொளீஇ - என்பை, உருகும் மெழுகு முதலியனபோல் நெகிழும்படி குளிர்ச்சியைக் கொளுத்தி,;

நோக்கத்தாலே (77) கொளுத்தியென்க.;

79. ஈரும் பேனும் இருந்து இறைகூடி - ஈரும்பேனும் கூடியிருந்து அரசாண்டு,;
80 - 81. [ வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர் துவர நீக்கி :];

வேரொடு நனைந்து வேறு இழை நுழைந்த துன்னல் சிதாஅர் நீக்கி - வேர்ப்பாலே நனைந்து சரடுகள் உள்ளே ஓடுதற்குக் காரணமாகிய தைத்தற்றொழிலையுடையனவாகிய சீரையை என்னிடத்தினின்றும் போக்கி,;


1 பொருநர் விடியற்காலத்தே சென்று தடாரி கொட்டிப் பாடுதலும் கேட்ட உபகாரிகள் அப்பொருநர்க்கு வேண்டியவற்றை அளித்தலும் பண்டைக்கால வழக்கம்;பு . வெ. 206.;

2 "இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பின், அவர்பழி தம்பழியன்று", "கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின், றிரப்புமோ ரேஎ ருடைத்து", "இரத்தலு மீதலே போலுங் கரத்தல், கனவிலுந் தேற்றாதார் மாட்டு" (குறள். 1051, 1053 - 4)