1 - திருமுருகாற்றுப்படை | கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
| 75 | கண்போன் மலர்ந்த காமரு சுனைமல ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங் குன்றமர்ந் துறைதலு முரிய னதா அன்று |
திருச்சீரலைவாய் | வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை யோடையொடு துயல்வரப் | 80 | படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் |
நகரோடு திசைசுட்டிக் குன்றத்தைக் குறித்தல் : "கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத்து(அகநா. 4 : 14-5) 75. கண்போ னெய்தல் ;கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமைகண்டு நுண்பல, சிறுபா சடைய நெய்தல் குறுமோ"(நற். 8 : 8, 27 : 9-12); "பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் ......... கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்"(குறுந். 9 : 4-6); "கண்போ னெய்தல்" (ஐங். 151 : 3); "மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ ........... பல்லிதழ் மலருண்கன்"(கலித். 45 : 9-11); "நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம், கண்ணென மலர்ந்த சுனையும்", "இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்"(அகநா. 38 : 10-11, 170 : 4); "கண்ணவிழ் நெய்தலும்" (சிலப். 14 : 77); "கண்ணின் மலரக் கருநீலம்", "குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே"(பு. வெ. 205, 290) 76. அஞ்சிறை வண்டி னரியின மொய்ப்ப"(ஐங். 489) 73 - 6. "முட்டாள சுடர்த்தாமரை, கட்கமழு நறுநெய்தல், வள்ளிதழவிழ் நீலம் ........... வண்டிறை கொண்ட கமழ்பூம்பொய்கை"(மதுரைக். 249-53) 77. "குன்றமர்ந்து"(பரி. 17 : 29) 71 - 7. கூடற்குடவயிற் பரங்குன்று: "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சினமிகு முருகன் றண்பரங் குன்றத்து" (அகநா. 59 : 10-11); "கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடாஅது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஒடியா விழவி னெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து"(அகநா. 149 : 14-7) 80. படுமணியிரட்டு மருங்கு: "படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தா, ணெடுநல் யானை", "ஒளிதிக ழோடை பொலிய மருங்கிற், படுமணி யிரட்ட வேறி", "தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத, லாடியல் யானை"(புறநா. 72 : 3-4, 161 : 18-9, 165 : 6-7) 81. மு. "கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்"(புறநா. 362 : 7)
|