பத்துப்பாட்டு 82 - 3, நோக்கு நுழைகல்லா நுண்மையை பூ கனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர (81) நல்கி - கண்ணிற்பார்வை இஃது இழை போன வழியென்று குறித்துப்பார்க்க வாராத நுண்மையையுடையவாய்ப் 1பூத்தொழில் முற்றுப்பெற்ற தன்மையாற் பாம்பினது தோலையொத்த துகிலை மிகநல்கி,; துவரவென்பதனை இதனொடு கூட்டுக.; 84 - 5. [ மழையென மருளும் மகிழ்செய் மாடத், திழையணி வனப்பினின்னகை மகளிர் :] இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் - இழைகளையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யுமகளிர்,; இதனை, "இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (220) என்றார், சிறுபாணாற்றிலும். 84 - 7. [ போக்கில் பொலங்கல நிறையப் பல்கால், வாக்குபு தரத்தர :] 84 - 7. மருள் செய்யும் மகிழ் மழையென மாடத்து பல்கால், வாக்குபு - உண்டார் மயங்குதலைச் செய்யுங் கள்ளை மழையென்னும்படி மாடத்திடத்தே பல்காலும் வார்த்து,; மகிழ் : ஆகுபெயர்.; 86 - 7. போக்கு இல் பொலங்கலம் நிறைய தர தர - ஓட்டமற்ற பொன்னாற் செய்த வட்டில் நிறையத் தரத்தர,; 87 - 8. வருத்தம் வீட ஆர உண்டு பெரு அஞர் போக்கி - வழி போன வருத்தம் போம்படி நிறையவுண்டு கள்ளுண்ணப் பெறுகிலே மென்று நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி,; 89. செருக்கொடு நின்ற காலை - மகிழ்ச்சியுடனே நான் நின்ற அந்திக் காலத்தே,; 89 - 90, மற்று அவன் திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி - இங்ஙனம் மிடி தீர்ந்த பின்பு அவனுடைய செல்வம் விளங்குகின்ற கோயிலில் ஒருபக்கத்தே கிடந்து,; அவனைச் சேவித்து நிற்கின்ற நங்குலத்திலுள்ள மகளிர் (85) பொலங்கல நிறைய (86) மகிழை (84) வார்த்துத் தரத்தர (87) உண்டு போக்கிக் (88) கோயிலில் ஒருசிறைத் தங்கியென முடிக்க.; 91 - 2. தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடா அது அதன் பயம் எய்திய அளவை மான - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்;
1 முருகு. 15-இன் குறிப்புரையைப் பார்க்க.
|