114

பத்துப்பாட்டு

117 - 8. [ கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே, யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி :] பல்லே கொல்லை உழு கொழு ஏய்ப்ப எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி - எம்முடைய பற்கள் கொல்லைநிலத்தே யுழுத கொழுவை யொப்பப்பகலும் இரவும் இறைச்சியைத்தின்று முனைமழுங்கி,;

119. உயிர்ப்ப இடம் பெறாஅது ஊண் முனிந்து - இளைப்பாற இடம் பெறாதே இவ்வுணவுகளை வெறுத்து,;

முற்கூறியனவெல்லாம் உண்டற்றொழிற்கு உரிமையுடைமையின், ஊண் முனிந்தென்றார்.

119 - 22. [ ஒருநாட், செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய, செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென, மெல்லெனக் கிளந்தன மாக :]

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ - குற்றத்தைச் செய்தெழுந்த பகைவரைத் திறைகொள்ளும் கூறுபாடுகளெல்லாம் முடியப்போன செல்வா,

பெயர்ந்து எம் தொல் பதி சேறும் என மெல்லென ஒருநாள் கிளந் தனமாக - இனி மீண்டு எம்முடைய பழைய ஊரிடத்தே செல்வேமென்று மெத்தென ஒருநாளிலே சொன்னேமாக,;

தொல்பதியென்றார், இதுவும் தமக்குப்பதியென்பது தோன்ற,;

122 - 4. [ வல்லே, யகறி ரோவெம் மாயம் விட்டெனச், சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு :]சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு எம் ஆயம் விட்டு வல்லே அகறிரோ என - அதுகேட்டுக் கோபித்தான்போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே எம் திரளைக்கைவிட்டு விரைந்து போகின்றீரோவெனச் சொல்லி,;

125 - 6. [ துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு, பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென :]

1பிடி புணர் வேழம் அடி துடி அன்ன தூங்கு நடை குழவியொடு கொள்க என - பிடியொடு புணர்ந்தகளிறுகளைத் தம் அடிகள் துடியின் கண்ணை யொத்த அசைந்த நடையினையுடைய கன்றுகளுடனே கைக்கொள்வாயாக வென்று சொல்லி,

127. [ தன்னறி யளவையிற் றரத்தர :] பெட்டவை (126) தன் அறி அளவையின் தர தர - பின்னும் தான் விரும்பியிருந்த ஊர்திகள் ஆடைகள் அணிகலங்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலேதர,;


1 பரிசிலர்க்குக் களிற்றோடு கன்றையும் பிடியையும் வழங்குதல் பண்டைக்கால வழக்கம்; "மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு, கறைபடி யானை யிரியல் போக்கும், மலைகெழு நாடன் மாவே ளாஅய்" (புறநா. 135 : 11 - 3)