116

பத்துப்பாட்டு

134. செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப - ஏவல் செய்யாத பகைவர் தேசம் மனக்கவற்சி பெருக,;

135 - 6. 1[ பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி, வெவ்வெஞ் செல்வன் விசும்புடர்ந் தாங்கு :] வெ வெ செல்வன் பௌவம் மீமிசை பகல் கதிர் பரப்பி விசும்பு படர்ந்தாங்கு - வெம்மையையுடைய 2எல்லாரும் விரும்பப்படும் இளஞாயிறு கடலின்மீதே பகற்பொழுதைச் செய்யுங் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் விசும்பிலே மெத்தெனச் சென்றாற்போல,

137.[ பிறந்துதவழ் கற்றதற் றொட்டு :]

தவழ் கற்றதன் தொட்டு - தவழ்தலைக் கற்றநாள் தொடங்கி,;

பிறந்து, முன்னேகூட்டிற்று.

137 - 40. [ சிறந்தநன், னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப, வாளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி :]

மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி (140) - 3கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்ற வலியாலே கலித்து,;

செல்வன் விசும்புபடர்ந்தாங்குத் (136) தவழ்கற்றதற்றொட்டு (137) மிகுகின்ற வலி (140) யென்க.

பின்பு அரசாட்சி பெற்றானாதலின், தவழ்கற்றதற்றொட்டு நாடுசெகிற் கொண்டானென்றல் பொருந்தாமையுணர்க.;

சிறந்த நல் (137) நாடு செகில் கொண்டு நாள் தோறும் வளர்ப்ப (138) - 4ஏனையோர் நாட்டிற்சிறந்த நன்னாட்டைத் தோளிலே வைத்துக் கொண்டு நாடோறும் வளர்த்தல் காரணமாக,;

தோள்வலியாலே பகைவென்று நாடுகாத்தமைபற்றி, நாடுசெகிற் கொண்டென்றார்.;

140. [ முலைக்கோள் விடாஅ மாத்திரை :] ஆளி நல் மான் அணங்கு உடைகுருளை (189) முலைகோள் விடாஅ மாத்திரை - ஆளியாகிய நல்ல


1 "பொருகடற் பருதி போலப் பொன்னனான் பிறந்த போழ்தே, மருளுடை மாத ருற்ற மம்மர்நோய் மறைந்த தன்றே" (சீவக. 304) என்பதும், ‘ஞாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்தபொழுதே தேவியிருளைப் போக்கிப் பின்பு பகைவெல்லுமென்பது கருத்து' (.) என்ற அதன் விசேடவுரைப்பகுதியும் இங்கே கோடற்குரியன.

2 "வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி" (சீவக. 2)

3 "தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல், காலனோ டொக்கு ஞாலப் பெரும்புகழ், புகரின் றோங்கிய நிகரில் கேள்வியன்" (பெருங். 1. 36 : 100 - 102)

4. புறநா. 35 : 11