119

2 - பொருநராற்றுப்படை

கொட்டை - தும்புமாம்.;

156. பெறல் அரு கலத்தின் பெட்டாங்கு உண்க என - பெறுதற்கரிய பொற்கலத்தே விரும்பினபடியே உண்பாயாகவென்று சொல்லி,;

157 - 8. [ பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர, வைகல் வைகல் கைகவி பருகி :] பூ கமழ் கை கவி தேறல் வாக்குபு தர தர வைகல் வைகல் பருகி - 1தீம் பூ நாறுகின்ற தன்கடுமையாற் சிறிதமையுமென்று 2கைகவித்தற்குக் காரணமான கட்டெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர நாடோறும் நாடோறும் பருகி,;

"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்" (புறநா. 392 : 16) என்றார் பிறரும்.;

159. எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை - நெருப்புத் தழைத்தாலொத்த ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழில்லாத தாமரையை,;

எனவே பொற்றாமரைக்கு வெளிப்படை கூறினார். "தோடே மடலே" (தொல். மரபு. சூ. 86) என்னும் சூத்திரத்தே கூறினாம்.;

160. சுரி இரு பித்தை பொலிய சூட்டி - கடைகுழன்ற கரிய மயிரிலே பொலிவுபெறச் சூட்டி,;

161 - 2. நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்த மொடு பாடினி அணிய - நூலாற்கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையுமுடைய பொன்னரிமாலையை வெள்ளிதாகிய ஒளியையுடைய முத்தத்தோடே பாடினி சூட,

163. கோட்டின் செய்த கொடுஞ்சி நெடு தேர் - யானைக்கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரிலே,

164. ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - சாதிலிங்கம் ஊட்டின தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிரசைய,;

165. பால் புரை புரவி நால்கு உடன்பூட்டி - பாலையொத்த நிறத்தினையுடைய குதிரைகள் நான்கினைச் சேரப்பூட்டி,;

நான்கு, நால்கெனப் பெயர்த்திரிசொல்.;

166. காலின் ஏழடி பின்சென்று - தான் காலாலே ஏழடி பின்னே வந்து,;

3ஏழடிவருதல் ஒருமரபு; ஏழிசைக்கும் வழிபாடுசெய்தானாகக் கருதுதலின்.


1 தீம்பூ - பஞ்சவாசத்துள் ஒன்றான குங்குமப்பூ.

2 ‘கைகவி நறுசெய் - கைகவித்தற்குக் காரணமான நெய்' (சீவக. 400, ந.)

3 "ஒன்பதின் சாணடப்பினும்" (சீவக. 179) என்றதன் விசேடவுரையில், ‘ஏழடியென்றல் மரபாயிருக்க, ஒருகாதமென்னுமெழுத்து நோக்கி, ஒன்பதின் சாணென்றாரேனும் அடியிடுமளவில் ஏழாம்' (.)