பத்துப்பாட்டு | கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே றுருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி | 85 | மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் | 90 | மனனேர் பெழுதரு வாணிற முகனே மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக |
82. காற்று செலவுக்கு: முருகு. 170; "கால்கிளர்ந் தன்னவூர்தி" (பதிற். "இருங்கண்யானை");"வளியி னியன்மிகுந் தேருங்களிறும்" (கலித். 50 : 15); "நீலயானை ............ கால்கிளர்ந்து" (மணி. 19 : 20-22); "காலிற்கடியது" (பெருங். 1. 42 : 226); "காற்றன்றேற், கடுமை யென்னாம் ............. மத்தயானை" (கம்ப. அதிகாயன். 216) 81-2. கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு" (பதிற். 11 :6); "ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப், பொருசமங் கடந்த புகழ்சால் வேழம்" (பரி. 21 : 1-2); "காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங், குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே ..... களிறு" (முத்.); "காற்றெனக் கடுங்கட் கூற்றென ........ தோன்றிய தடலருங் கடாக்களிறு", "காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக், கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ" (சீவக. 973, 1837); "பாகன், காற்றெ னத்தெறு கனலெனக் கனைகட லென்னக், கூற்ற மென்னமேற் றூண்டினன் குவலயா பீடம்" (பாகவதம், 10. 17 : 14) 83-4. ஐவகை யுருவின்முடி : "உவமை நீங்கிய வைவகைத் தாய வேற் றுருவின், மவுலி" (கந்த. முதனாட்பானு. 252) 85.உறழ்: வினைப்பா லுவமம்; தொல். உவம. சூ. 12, பேர். மேற். 89.தாவில் கொள்கை : முருகு. 175. மு. "தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்" (றள். 266); "என்னுயிர்க் குறுவதுஞ் செய்ய வெண்ணினேன்" (கம்ப. அயோத்தி. மந்திர. 15) 91. மாயிருண் ஞாலம் : "இருள்தருமா ஞாலம்" (திவ்.)
|