பத்துப்பாட்டு "செலவினும் வரவினும்" (தொல். கிளவி. சூ. 28) என்னும் சூத்திரத்துப் பொதுவிதியாற் சென்றென்பது வந்தென்னும் பொருட்டாய் நின்றது.; 166 - 7. [ கோலின், றாறுகளைந்து:] இன் தாறு கோல் களைந்து - செலுத்துதற்கு இனிதாகிய செலவு முடுக்குங்கோலைப் போக்கி,; என்றதனாற் கடுவிசைக்கு இவர் இருத்தலாற்றாரென்று கருதி இயற்கையிற்சேறல் அமையுமென்றான். 167. ஏறு என்று ஏற்றி - இங்ஙனம் ஏறென்று ஏறவிட்டு, 167 - 8. வீறு பெறு பெரு யாழ் முறையுளி கழிப்பி - ஏனையாழ்களின் வீறுபெற்ற யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கு முறைமைகளை நினக்குத் தந்துவிட்டு, -70. நீர் வாய் தண் பணை தழீஇய தளரா இருக்கை நல் பல் ஊர நாட்டொடு - நீரை எப்பொழுதும் தன்னிடத்தேயுடைத்தாகிய தண்ணிய மருத நிலஞ்சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய நன்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே,; 170 - 72. [ நன்பல், வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம் :]; பறை வெரூஉ நுவலும் (171) வேழம் (172) - பறை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுதற்குக் காரணமாகிய யானை,; பரூஉ பெரு தட கை (171) வெரு வரு செலவின் வெகுளி (172) நல்பல் (170) வேழம் (172) - பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும் அச்சந்தோன்றும் ஓட்டத்தினையும் கோபத்தினையுமுடைய நன்றாகிய பலயானைகள்,; 173. தரவு இடை தங்கல் ஓவிலன் - தருதற்றொழிலிடத்தே நிலை பெறுதலை ஒழிதலிலன் ;; இனித் தரலிடத்துத் தாழ்த்தலிலனென்றுமாம். 173 - 4. வரவிடை பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி - வருதலிடத்துப் பெற்ற பொருள்களைப் பிறர்க்குப்பிறர்க்குக் கொடுத்து, 174 - 5. தெற்றென செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் - கடுக அவனிடத்து நின்றும் போகின்றபோக்கை முடிவுபோக்குவீராயின்,; 175. பல புலந்து - அது பொறாமற் பலகாலும் வெறுத்து,; 176. நில்லா உலகத்து நிலைமை தூக்கி - செல்வமும் யாக்கையு முதலியன நிலைநில்லாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து,;
என்றெழுதியிருப்பதும், "ஏழுமேழடி யூக்கி நடந்து செலா" சீவக. 1384),"ஏழுடி யெழுத லாற்றா தாயினும்"(பெருங். 1. 53 : 132) என்பவையும் இம்மரபைப் புலப்படுத்தும்.
|