121

2 - பொருநராற்றுப்படை

1நிலைபெறுந் தகைமையுடைத்தாகலிற் புகழை நிலைமையென்றார்; ஆகுபெயர்.

177. செல்க என - இங்ஙனம் போகெனக்கூறி,;

விடுக்குவன் அல்லன் - நும்மைக் கடுக விடுவானல்லன்;

தொழுது முன்னிற்குவிராயின் (150) நோக்கி (151) நல்கிப் (155) பாடினி அணியாநிற்கச் (162) சூட்டி (160) வாக்குபு தரத்தரப் (157) பருகித் (158) தெற்றெனச் (174) செலவுகடைக்கூட்டுதிராயின் அதற்குப் பல புலந்து (175) தேரிலே (163) குதிரையைப்பூட்டி (165) ஏற்றி (167) முறை யுளிக்கழிப்பி (168) விடுக்குவனல்லன் (177) ; பின்னர் நின்னைநோக்கி நில்லாத உலகத்து நிலைமையைச் சீர் தூக்கி (176) வரவிடைப் (173) பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி (174) இங்ஙனஞ் செல்வாயாக வெனக்கூறி (177) அங்ஙனம் நீபோதற்கு நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்சல் ஓவிலன் (173) என முடிக்க.;

நில்லாவுலகத்து நிலைமை தூக்கிப் (176) பலபுலந்து (175) செல்கென விடுக்குவனல்லன் (177) என்பாருமுளர்.

177 - 9. ஒல்லென திரை பிறழிய இரு பௌவத்து கரை சூழ்ந்த அகல் கிடக்கை மண் மருங்கினான் (227) நாடு (248) - ஒல்லென்னும் ஓசைபடத் திரைமுரிந்த கரியகடலினது கரைசூழ்ந்த அகன்ற பரப்பினையுடைய இவ்வுலகத்து ஒரு கூற்றின்கண் உளதாகிய சோழநாடு,

180 - 82. [ மாமாவின் வயின்வயினெற், றாழ்தாழைத் தண்டண்டலைக், கூடுகெழீஇய குடிவயினான்:];

மாமாவின் வயின் வயின் நெல்கூடு கெழீஇய நாடு (248) - ஒரு மாநிலத்தில் ஒருமாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும் நெற் கூடுகள் பொருந்தின சோழநாடு.

2தாழ் தாழை தண் தண்டலை குடிவயினான் - தாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிலிருக்கின்ற குடிமக்களிடத்தில்,

183 - 4. செ சோற்ற பலி மாந்திய கரு காக்கை - உதிரத்தாற் சிவந்தசோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கரிய காக்கை,;

184 - 6. [ கவவுமுனையின், மனைநொச்சி நிழலாங்க, ணீற்றியாமை தன் பார்ப்போம்பவும் :] மனை நொச்சி நிழல் ஆங்கண் ஈற்று யாமை


1 "மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே", "தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே" (புறநா. 165 : 1 - 2, 366 : 5); "ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன் றில்" (குறள். 233), "இந்நிலத்து, மன்னுதல் வேண்டி னிசைநடுக" (நான்மணிக். 15) என்பவையும், புறநானூறு, 165 : 2 - 3-ஆம் அடிகளின் அடிக்குறிப்பும் இங்கே கருதற்பாலன.

இது முதல் திணைமயக்கம் கூறப்படுகிறது.