124

பத்துப்பாட்டு

கானவர் (220) அவிழ் தளவின் அகல் தோன்றி (199) நகு முல்லை வீ உகு தேறு (220) பொன் கொன்றை மணி காயா (201) நல் புறவின் நடை முனையின் (202) மருதம் பாட (220) - முல்லைநிலத்து வாழ்வார் அவிழ்கின்றதளவினையும் பரந்ததோன்றியினையும் அலர்கின்ற முல்லையினையும் பூ உகுகின்ற தேற்றாவினையும் பொன்போலும் பூவினையுடைய கொன்றையினையும் நீலமணிபோலும் பூவினையுடைய காயாவினையுமுடைய நல்லகாட்டில் உறைகின்ற ஒழுக்கத்தை வெறுக்கின் மருத நிலத்தே சென்று அவ்வொழுக்கத்தைப் புகழவும்,;

1தளவு - முல்லைவிசேடம்.

சுற வழங்கும் இல் பௌவத்து (203) இறவு அருந்திய இனம் நாரை (204) பூ புன்னை சினை சேப்பின் (205) ஓங்கு திரை ஒலி வெரீஇ (206) தீ பெண்ணை மடல் சேப்பவும் (207) - சுறாத்திரியும் கரிய கடலின்கண் இறவைத்தின்ற திரண்டநாரைகள் பூக்களையுடைய புன்னைக்கோட்டிலே தங்கின் அதன்மேலே முரிகின்ற உயர்ந்ததிரையினது ஆரவாராத்திற்கு வெருவி மருதநிலத்தில் இனியபனையினது மடலிலே தங்கவும்,

கோள் தெங்கின் குலை வாழை (208) கொழு காந்தள் மலர்நாகத்து (209) துடி குடிஞை குடி பாக்கத்து (210) பரதவர் (218) அவண் முனையின் (195) குறிஞ்சி பாட (218) - குலைகொண்ட தெங்கினையும் குலையினையுடைய வாழையினையும் கொழுவிய காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையினையும் துடியோசைபோலும் ஓசையினையுடைய பேராந்தையினையுமுடைய குடியிருப்பையுடைத்தாகிய பாக்கத்தில் வாழும் பரதவர் அவ்விடத்தை வெறுப்பின் குறிஞ்சி நிலத்தே சென்று அவ்விடத்தைப் புகழவும்.

214 - 5. தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும் - 2தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள் மீனினது நெய்யோடே நறவையும் கொண்டுபோகவும்,;

216 - 7. தீ கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் - இனிய கரும்போடே அவலைக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே கள்ளையும் கொண்டுபோகவும்.;

218 - 9. [ குறிஞ்சி பரதர் பாட நெய்தல், நறும்பூங் கண்ணி குறவர் சூட. :]

குறவர் நெய்தல் நறு பூ கண்ணி சூட - குறவர் அந்நிலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது நறிய பூவாற்செய்த கண்ணியைச் சூடவும்.;


1 "தளவம் - செம்முல்லை" (குறிஞ்சிப். 80, ந.)

2 "தேனெய் தோய்ந்தன" (சீவக. 2747); தேன் நெய்யென்றும் வழங்கும். தேனை வடிகட்டுதற்குக் கருவியாயிருத்தலின் புன்னாடை நெய்யரியெனப் பெயர்பெற்றது.