2 - பொருநராற்றுப்படை 220 - 22. [ கானவர் மருதம் பாட வகவர், நீனிற முல்லைப் பஃறிணை நுவலக், கானக்கோழி கதிர்குத்த:] கானம் கோழி கதிர் 1குத்த - காட்டிடத்துக் கோழிகள் நெற்கதிரைத் தின்னவும்,; 223. மனை கோழி தினை கவர - மருதநிலத்தின் மனையிற்கோழிகள் தினையைத் தின்னவும்,; 224. வரை மந்தி கழி மூழ்க - மலையிடத்திற்குரிய மந்திகள் கழியிலே மூழ்கவும்,; 225. கழி நாரை வரை யிறுப்ப - கழியிற்றிரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும்,; 226. தண் வைப்பின் நால் நாடு குழீஇ - குளிர்ந்த வைப்புக்களையுடைய நான்குகூறாகிய நாடுகள் திரண்டு,; நால் நாடென்றார், "நடுவணைந்திணை நடுவண தொழிய" (தொல். அகத். சூ. 2) என்னுஞ் சூத்திரத்தால். குழீஇயென்னும் செய்தெனெச்சம் பிறவினைகொண்டது, "அம் முக்கிளவியும்" (தொல். வினை. சூ. 34) என்னும் சூத்திரவிதியால். பார்ப்போம்பவும் (186) அயரவும் (187) மயிலால, (190) மடமஞ்ஞை (212) பலபெயரவும் (213) நாரை (204) சேப்பவும் (207) அகவர் (220) அகன்றுமாறிப் (198) பஃறிணை நுவலவும் (221) கானவர் (220) நடைமுனையின் (202) மருதம்பாடவும் (220) பாக்கத்துப் (210) பரதவர் குறிஞ்சிபாடவும் (218) கிழங்கு மாறியோர் (214) நறவுமறுகவும் (215) அவல்வகுத்தோர் (216) மதுமறுகவும் (217) குறவர் கண்ணிசூடவும் (219) கோழி கதிர்குத்தவும் (222) மனைக்கோழி தினைக்கவரவும் (223) மந்தி மூழ்கவும் (224) நாரை வரையிறுப்பவும் (225) நானாடு குழீஇ (226) மாமாவின் வயின்வயின் நெற் (180) கூடு கெழீஇய (182) நாடு (248) என வினைமுடிக்க.; 227 - 31. [ மண்மருங்கினான் மறுவின்றி, யொருகுடையா னொன்று கூறப், பெரிதாண்ட பெருங்கேண்மை, யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ, லன்னோன் வாழி வென்வேற் குருசில்:] மறு இன்றி (227) அறனொடு புணர்ந்த திறன் அறி செ கோல் (230) ஒரு குடையான் ஒன்று கூற (228) முதியோர் (187) முரண் செல (188) பெரு கேண்மை பெரிது ஆண்ட (229) வென் வேல் குருசில் (231) - குற்றமின்றித் தருமத்தோடு கூடிய வழியை உலகம் அறிதற்குக் காரண
1 குத்தல் : "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து" (குறள், 490)
|